பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவி மாடலிங் வாழ்க்கைக்குத் திரும்பினார்..! முகம் சுளித்த ரசிகர்கள்..! – வீடியோ உள்ளே

saami
Advertisement

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர், முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் தான் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் உலகின் சர்சைக்குரிய தம்பதிகளாக இருந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் சமியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, மேட்ச் பிக்சிங் மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில், சமி மீடிப்பு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
sami
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சமியின் மனைவி ஹசின் ஜஹான் போலீஸிடம், முகமது ஷமி மற்றும் அவரின் சகோதரர் இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றும் கொலை செய்வதாக மிரட்டி வருகின்றனர் எனப் புகார் அளித்தார். மேலும், முகமது ஷமிக்குப் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்து வருவதாகவும், மேட்ச் பிக்ஸிங் போன்ற சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார் எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

சமீபத்தில் ஹசின் ஜஹான் மேலும் ஒரு குற்றச்சாட்டையும் கூறியிருந்தார். சமி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று மேலும் ஒரு தாக்குதலை சமி மீது வைத்திருந்தார். இந்நிலையில் சமியின் மனைவி ஹசின் ஜஹான் மாடலிங் துறையில் ஈடுபட்டுபட்டு வருகிறார். சமீபத்தில் ஹசின் ஜஹான் நடத்திய போட்டோ ஷூட் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.


இதுகுறித்து சமீபத்தில் ஹசின் ஜஹான் தெரிவிக்கையில்” என்னுடைய லட்சியத் தையும், கனவையும் சமிக்காக விட்டு கொடுத்து விட்டேன். தற்போது அவர் என்னை விட்டு சென்று விட்டார். நான் என்னுடைய பழைய புகழை பெற மிகவும் கஷ்டப்பட்டு வருகிறேன். முதலில் என்னுடைய பழைய நண்பர்களுக்கு போன் செய்து உதவி கேட்க தயங்கினேன். ஆனால், என்னுடைய மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களை தொடர்பு கொண்டேன், அவர்களும் எனக்கு உதவினார்கள் ” என்று தெரிவித்துள்ளார். மேலும்,விரைவில் ஹசின் ஜஹான் சினிமாவிலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -
Advertisement