ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம்பெற வாய்ப்பே இல்ல.. பி.சி.சி.ஐ கூறுவது என்ன? – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அதன் பிறகு தனது காயத்திற்கான அறுவை சிகிச்சையை லண்டன் சென்று மேற்கொண்டார். பின்னர் கடந்த ஓராண்டாகவே ஓய்விலிருந்து வந்த அவர் மெல்ல மெல்ல தற்போது போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார்.

முகமது ஷமிக்கு ஏற்பட்டுள்ள காயம் :

அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ரஞ்சி தொடரில் விளையாடியிருந்த முகமது ஷமி ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் பாதியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எஞ்சியுள்ள தொடருக்கான இந்திய அணியிலும் அவரால் இணைய முடியாது என பிசிசிஐ தெள்ளத் தெளிவாக கூறிவிட்டது.

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் : முகமது ஷமி ரஞ்சி கோப்பை போட்டியின் போது பெங்கால் அணிக்காக 43 ஓவர்கள் வீசி இருக்கிறார். ஆனாலும் அவரது காலில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. பணிச்சுமை காரணமாக அவருக்கு இந்த தேய்மானம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக தற்போது பிசிசிஐ மருத்துவக்குழு அவரது இந்த காயத்தை கண்காணித்து வரும் வேளையில் இனி அவர் தொடர்ந்து விளையாடினால் மேலும் காயம் அதிகரிக்கும் என்பதனால் இன்னும் சில வாரங்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

அதன் காரணமாக எதிர்வரும் விஜய் ஹசாரே தொடரிலும் அவர் விளையாடுவாரா? என்பது சந்தேகமாகியுள்ள வேளையில் இந்திய அணிக்கு முகமது ஷமி திரும்ப இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம் என்று தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கடினமான டெஸ்டில் எல்லா நாளும் அசத்த முடியாது.. அதையும் தாண்டி அசத்தும் ரகசியம் பற்றி பும்ரா பேட்டி

எனவே இனிவரும் சில வாரங்கள் ஓய்வெடுத்து மீண்டும் பயிற்சியை துவங்கி அதன் பின்னர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தனது உடற்தகுதியை நிரூபித்தால் மட்டுமே அவருக்கு இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement