2015 உலகக்கோப்பை முழுவதும் உடைந்த முட்டியோடு விளையாடினேன் – ரகசியத்தை பகிர்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர்

Shami-2
- Advertisement -

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தி மைக்கல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை முன்னேற இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் பெரிதும் கைகொடுத்தனர் என்றே கூற வேண்டும்.

Shami 1

- Advertisement -

அந்த தொடரில் லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதியில் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தனது சிறப்பான ஆட்டத்தை செயல் படுத்தினாலும் அந்த தொடர் முடிந்து காயமடைந்து அணியிலிருந்து சிறிது காலம் வெளியேறினார்.

இந்நிலையில் அந்த தருணம் குறித்து தற்போது இர்பான் பதான் உடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய ஷமி கூறுகையில் :2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முழுவதும் நான் உடைந்து முட்டையுடன் விளையாடியதாக தெரிவித்துள்ளார். மேலும் முதல் போட்டியிலேயே மூட்டுப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

shami

இதனால் எனது தொடை பகுதியும், முட்டியும் ஒரே அளவில் இருந்தது. மருத்துவர்கள் ஒவ்வொரு நாளும் முட்டியில் இருந்து திரவத்தை வெளியேற்றினர். மூன்று வலிநிவாரண மாத்திரைகளை இதற்காக நான் எடுத்துக்கொண்டேன். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்பாக நான் அணி நிர்வாகத்திடம் சென்று என்னால் இதற்கு மேல் வலி தாங்க முடியாது என்றேன் ஆனால் கேப்டன் தோனி மற்றும் நிர்வாகம் என் மீது அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்தனர்.

- Advertisement -

என் திறமை மீது நம்பிக்கை வைத்ததால் அந்த வலியோடு நான் அந்த போட்டியில் களமிறங்கி முதல் கட்ட ஓவர்களில் வெறும் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தேன். மீண்டும் தோனியிடம் சென்று இதற்கு மேல் பவுலிங் செய்ய முடியாது என்றேன். ஆனால் அவர் என்னிடம் இனிமேல் பார்ட்டைம் பவுலர்கள் பவுலிங் செய்ய சொல்ல முடியாது என்று கூறினார். அதேநேரம் 60 ரன்களுக்கு மேல் கொடுத்து விட்டோம் என்றார். அதனால் அந்த வலியோடு மீதி ஓவர்களை வீசி முடித்தேன்.

Shami

அதுபோன்ற சூழ்நிலையை நான் இதுவரை சந்தித்ததே இல்லை. அப்போது சிலர் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் தற்போது அந்த காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக பந்துவீசி வருகிறேன். பொழுதுபோக்காக டி20 கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்தேன். எனக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்றுதான் ஆசை என்று ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement