இந்திய அணியின் முக்கிய வீரருக்கு ஓய்வளித்த தேர்வுக்குழு. காரணம் இதுதானாம் – இதை கவனிச்சீங்களா ?

Shami
- Advertisement -

வரும் 12ம் தேதி தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் கொல்கத்தா, தர்மசாலா மற்றும் லக்னோ ஆகிய மைதானங்களில் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் இளம் வீரர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர்.

IND-2

- Advertisement -

இருந்தாலும் இந்திய அணியின் காம்பினேஷன் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். ஏனென்றால் ஏற்கனவே இந்திய அணி நியூசிலாந்தில் தோற்றுவிட்டது. இதற்காக விராட் கோலி புதிதாக சில உத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. இந்த அணியில் ஏற்கனவே காயத்திலிருந்து புவனேஸ்வர் குமார், ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீண்டும் அணிக்குள் வந்துள்ளனர்.

இதன் காரணமாக ஒரு சில வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. துவக்க வீரர்களாக இளம் வீரரான பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் இறங்க பெரிய வாய்ப்புகள் உள்ளது. ஏனெனில் அதிரடி வீரரான கேஎல் ராகுல் கீப்பிங் பணியை செய்வதுடன் 5வது இடத்தில் களமிறக்கவே அணி நிர்வாகம் ஆசை காட்டும்.

Shami

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் இளம்வீரர் சைனி அவருக்கு பதிலாக அணியில் இடம் பிடித்து விளையாட இருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஷமியின் ஓய்வு குறித்து வெளியான தகவலின்படி ஷமி கடந்த பல மாதங்களாக தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகளில் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக விளையாடி வருவதால் ஐபிஎல் தொடருக்கு முன் ஓய்வு தேவை என்ற காரணத்தினாலும், டி20 உலக கோப்பை தயாராகும் விதம் காரணமாக இந்த ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் தேர்வுக்குழுவின் இருந்து வெளியான தகவலின்படி இதே கருத்து கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்று இளம் வேகப்பந்து வீச்சாளரான சைனியின் பந்து வீச்சு அபாரமாக இருந்து வருவதால் அவரை மேலும் ஊக்குவித்து தயார் செய்யும் விதமாக இந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் அவரை விளையாடவைக்க இந்திய அணி திட்டம் செய்துள்ளதாகவும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement