இன்னும் 5 விக்கெட் தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டவிருக்கும் முகமது ஷமி – விவரம் இதோ

Shami-3
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை கேப்டவுன் நகரில் துவங்கவுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் உள்ளதால் இந்த மூன்றாவது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த மூன்றாவது போட்டியில் ஒரு மகத்தான சாதனையை படைக்க காத்திருக்கிறார்.

shami 2

- Advertisement -

அதன்படி நாளை துவங்கவுள்ள 3 ஆவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அபாரமான சாதனையை எட்டும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளையும், இரண்டாவது போட்டியில் 3 விக்கெட்டுகள் என 11 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் ஷமி.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக மட்டும் இதுவரை 45 டெஸ்ட் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார். மேலும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய ஐந்தாவது பவுலர் என்ற சாதனையை அவர் படைப்பார்.

shami 1

இதற்கு முன்னதாக கும்ப்ளே, ஹர்பஜன், ஸ்ரீநாத், அஷ்வின் ஆகியோர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக 50 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். அவர்களைத் தொடர்ந்து ஷமியும் இந்த பட்டியலில் இணைய அருமையான வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement