IND vs AUS : 4 ஆவது போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர் – பி.சி.சி.ஐ போட்டுள்ள திட்டம்

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது வரை நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இருந்தாலும் முதல் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணியானது மூன்றாவது போட்டியில் தோற்றது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது.

அதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தங்களுக்கு தானே கடினமாக்கிக் கொண்டது. இதன் காரணமாக அகமதாபாத்தில் வரும் மார்ச் ஒன்பதாம் தேதி துவங்கும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி வீழ்த்தி தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த கடைசி போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் கண்டிப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அணியின் நிர்வாகம் மற்றும் பிசிசிஐ ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஐபிஎல் தொடர் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை திட்டங்களுக்காக அவ்வப்போது வீரர்களுக்கு ஓய்வு வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

Shami

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது கடைசி போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் மீண்டும் முகமது ஷமி அணிக்குள் வருவார் என்றும் அவருக்கு பதிலாக சிராஜுக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : ட்ராப் பண்ணதுக்காக 1 நாள் பேசாம இருந்த அவர் அற்புதமான டீம் பிளேயர் – பரிதாப இந்திய வீரரை பாராட்டும் பரத் அருண்

இதனால் முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களாக இடம் பெறுவார்கள். மைதானம் ரிவர்ஸ் ஸ்விங்கிற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும் என்பதனால் முகமது ஷமி கட்டாயம் அகமதாபாத் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement