4 பவுலர்களில் பும்ராவுக்கு பதில் அவரே சரியானவர், இந்தியா இன்னும் அதில் முன்னேறனும் – சச்சின் டெண்டுல்கர் அறிவுரை

Sachin-and-IND-Team
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இருப்பினும் கடைசி நேரத்தில் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியது பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்த நிலைமையை சமாளித்து வெற்றி பெற தயாராகும் இந்தியாவுக்கு காயமடைந்த பும்ராவிற்கு பதிலாக தீபக் சஹரும் காயத்தால் வெளியேறியதால் முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார்.

axar Patel Virat Kohli Mohammed Shami

- Advertisement -

கடைசியாக கடந்த 2021 டி20 உலக கோப்பையில் விளையாடிய அவரை 30 வயதாகி விட்டார் என்பதற்காக கழற்றிவிட்ட பிசிசிஐ ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அதில் அவர்கள் சொதப்பியதால் ஷமியை மீண்டும் கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தன. இருப்பினும் ஸ்டேண்ட் பை லிஸ்டில் மட்டுமே இடம் பிடித்த அவர் சமீபத்திய ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் துரதிஷ்டவசமாக வெளியேறினாலும் கடைசி நேரத்தில் அதிர்ஷ்டவசமாக மீண்டும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

பும்ராவுக்கு பதில்:
ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்து முதல் வருடத்திலேயே குஜராத் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் கடந்த ஒரு வருடமாக எவ்வித சர்வதேச கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாத காரணத்தால் திடீரென்று ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் பயிற்சிப் போட்டியில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்ட போது முதல் முறையாக அனலாக பந்து வீசிய அவர் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார்.

INDIA Arshdeep Singh Harshal Patel

அந்த வகையில் தற்போதைய அணியில் தேர்வாகியுள்ள 4 வேகப்பந்து வீச்சாளர்களில் பும்ராவுக்கு பதில் விளையாட ஷமி கச்சிதமானவர் என்று தெரிவிக்கும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அர்ஷிதீப் சிங் தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாக பாராட்டியுள்ளார். மேலும் பெரிய மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் துல்லியமான ஃபீல்டிங் வெற்றியில் முக்கியப் பங்காற்றும் என்பதால் அதில் இந்தியா முன்னேற வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது வருமாறு.

- Advertisement -

“ஷமி தான் பும்ராவுக்கு சரியான மாற்று வீரர். அவர் நீண்ட வருடங்களாக விக்கெட் எடுக்கும் பவுலராக திகழ்கிறார். அவர் பந்து வீசுவதை நான் எப்போதும் மகிழ்ச்சியாக பார்ப்பேன். அவர் பும்ராவுக்கு பதில் விளையாட கச்சிதமாக பொருந்தக் கூடியவர் என்றாலும் விளையாடும் 11 பேர் அணி பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. மேலும் நிறைய நம்பிக்கையையும் சமநிலையும் கொண்ட வீரராக அர்ஷிதீப் உள்ளார். அவரைப் பார்த்த வரை போட்டியில் தன்னை உட்படுத்திக் கொள்பவராக எனக்கு தோன்றுகிறார். அவரிடம் எனக்கு பிடித்தது என்னவென்றால் டி20 கிரிக்கெட்டில் புதிதாக யோசித்து புதிய ஷாட் அடிக்கும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் ஒரு திட்டத்தை உருவாக்கி சிறப்பாக செயல்படுகிறார் என்பது மிகமிக முக்கியமாகும்”

Sachin

“எனவே உங்களிடம் திட்டம் இருந்தால் அதில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் இந்த தொடரில் சந்தேகமின்றி பேட்டிங், பவுலிங், பினிஷிங், விக்கெட்களை எடுப்பது என எந்த துறையாக இருந்தாலும் நாம் ஆரம்பத்திலேயே நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டும். மேலும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவது முக்கியமாகும். இம்முறை ஆஸ்திரேலியாவில் பவுண்டரி அளவு எந்தளவுக்கு இருக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் பொதுவாகவே பெரிய மைதானங்கள் கொண்ட ஆஸ்திரேலியாவில் தூரத்தில் இருந்து தூக்கி எறிந்து ரன் அவுட் செய்வது, கேட்ச்களை பிடிப்பது போன்ற சிறப்பான பீல்டிங் போட்டியை தலைகீழாக மாற்றக்கூடியது” என்று கூறினார்.

மேலும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சமீப காலங்களில் சிறப்பாக செயல்பட்டதால் அனைவரும் அவரை நம்பிக்கையுடன் எதிர்பார்க்க துவங்கியுள்ளனர். ஒருகட்டத்தில் அணிக்குள் தனது இடத்தை பிடிப்பதற்காக அழகாக பேட்டிங் செய்த அவருக்கு இப்போது உலக அரங்கில் பேட்டிங் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அனைவரும் அவரை பாராட்டும் போது அவருக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும். அதனால் அனைவரும் தம்மிடம் ஸ்பெஷலாக எதிர்பார்ப்பதை அவரும் ஏற்று நடக்கிறார். தற்போது அவர் தன்னம்பிக்கை மிக்கவராக உள்ளார்” என்று பாராட்டினார்.

Advertisement