- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சிக்கலில் இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி.. கடைசி நேரத்தில் விலக வாய்ப்பு – விவரம் இதோ

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தற்போது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக அரையறுதி சுற்றுக்கான வாய்ப்பினை உறுதி செய்துள்ளது. அதனை தொடர்ந்து எஞ்சியுள்ள கடைசி ஒரு லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது.

முகமது ஷமி செய்திருக்கும் இக்கட்டான நிலை :

இந்நிலையில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணையில் முன்னணி நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாததால் தற்போது முகமது ஷமி தான் இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டுக்கு தலைமை தாங்கி வழிநடத்தி வருகிறார்.

- Advertisement -

அவரை தவிர்த்து அனுபவமற்றவ வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா மற்றும் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஹர்டிக் பாண்டியா மட்டுமே உள்ளனர். அதோடு பேக்கப் வீரராக அர்ஷ்தீப் சிங் மட்டுமே உள்ளார். எனவே இந்த தொடரில் முகமது ஷமி முழுமையாக விளையாடி வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த தொடரின் இறுதி போட்டி வரை இந்திய அணி செல்லும் பட்சத்தில் இன்னும் இந்திய அணி மூன்று போட்டிகளில் விளையாட இருக்கிறது.

அதற்கு முன்னதாக தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரரான முகமது ஷமி எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே கடந்த 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடர் முடிந்த பின்னர் காயம் காரணமாக வெளியேறிய முகமது ஷமி தற்போது 14 மாதங்கள் கழித்து மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டிற்கு திரும்பியிருந்த வேளையில் வங்கதேச அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

- Advertisement -

ஆனாலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் போட்டியின் ஆரம்பத்திலேயே காலில் அசவுகரியத்தை உணர்ந்தார். இதன் காரணமாக அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் எனவே இந்த தொடரின் கடைசி கட்டத்தில் அவர் இந்திய அணியில் இருந்து விலகவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் எதிரித்து விளையாடப்போகும் அணி எது? – விவரம் இதோ

அப்படி முகமது ஷமி ஒருவேளை ஷமி இந்த தொடரில் இருந்து விலகினால் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்படுவது மட்டுமின்றி இந்திய அணி அனுபவமற்ற வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டே இறுதிக்கட்ட போட்டிகளை அணுக வேண்டிய நிலை ஏற்படும்.

- Advertisement -