இதைமட்டும் செய்ஞ்சா போதும்.. ஆஸ்திரேலிய தொடரில் முகமது ஷமி இடம்பிடிக்க வாய்ப்பு – விவரம் இதோ

Shami
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி மட்டுமே எஞ்சியிருக்கும் வேளையில் அந்த போட்டி முடிந்த கையோடு இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள காத்திருக்கிறது. அப்படி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

முகமது ஷமி இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பு :

இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்ட வேளையில் அந்த இந்திய அணியில் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. முகமது ஷமி இன்னும் காயத்திலிருந்து முழுமையாக குணமடையாததால் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு நேரடியாக வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் இந்திய அணியில் இடம்பெற ஒரு வாய்ப்பு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வகையில் கடந்த பல மாதங்களாக சிகிச்சை பெற்ற பின்னர் தற்போது பந்துவீச்சு பயிற்சி எடுத்து வரும் முகமது ஷமி மெல்ல மெல்ல முழுவேகத்தில் பந்துவீச்சு பயிற்சியையும் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் இந்திய அணி பெங்களூரு மைதானத்தில் விளையாடிய போது கூட இந்திய அணி வீரர்களுடன் இணைந்து அவர் பயிற்சியில் பந்துவீசி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது மீண்டும் முழு உடற்தகுதியை எட்டும் முனைப்புடன் தீவிர முயற்சியில் இறங்கி வரும் ஷமி விரைவில் நடைபெறவுள்ள ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அப்படி பெங்கால் அணிக்காக ரஞ்சி தொடரில் விளையாடவுள்ள அவர் இரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்துவீசி நீண்ட நேரம் தன்னால் பந்து வீச முடியும் என்று அவரது உடற்தகுதியை நிரூபித்து விட்டால் போதும்.

இதையும் படிங்க : 3 மேட்ச் தான் ஆடுனாரு.. அதுக்குள்ள 3 மாசம் ரெஸ்ட்டா? மாயங்க் யாத்விற்கு என்ன ஆச்சு? – விவரம் இதோ

நேரடியாக அவரை ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் சேர்க்க முடியும். ரிசர்வ் வீரர்களில் யாராவது ஒருவரை திரும்ப பெற்று முகமது ஷமியை அந்த இடத்தில் தேர்வு செய்யலாம். அப்படி தேர்வானால் நேரடியாக அவர் ஆஸ்திரேலிய செல்வது மட்டுமின்றி முதன்மை அணியில் இருக்கும் வீரர்களில் ஒருவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக அந்த தொடரில் நேரடியாக முகமது ஷமியால் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement