இந்திய டி20 அணியில் இவரை சேர்த்திருக்க வேண்டும். இவரிடம் என்ன குறை இருக்கிறது – கைப் ஆதங்கம்

Kaif

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து இருக்கிறது. அங்கு நான்கு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் நவம்பர் 27ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்கியிருக்கிறது. இதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய வீரர்கள் அனைவரும் சிட்னி நகரத்திற்கு வெளியே உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றர்.

INDvsAUS

இந்த தொடருக்கான மூன்று விதமான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் தமிழக வீரரான அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடைசியாக 2017ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கலந்துகொண்ட அஸ்வின் அதன் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை.

தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டும் முக்கிய வீரராக விளையாடி வருகிறார். ஆனால் அவரை டி20 அணியிலும் சேர்க்க வேண்டும் என்பது குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த ஐபிஎல் தொடரில் கோலி, பொல்லார்ட் , கெயில், வார்னர், டிகாக், கருண் நாயர், பட்லர், ஸ்மித், படிக்கல், பூரான் அவரது விக்கெட்டை அஸ்வின் எடுத்துள்ளார்.

Ashwin 2

இதில் பெரும்பாலான விக்கெட்டுகள் பவர் பிளே ஓவரிலேயே வந்துள்ளது. எனவே இவர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக இருப்பார் எனக்கு என்றே தோன்றுகிறது. எனவே அவரை அணியில் சேர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ashwin

கடந்த மூன்று வருடங்களாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வருகிறார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கூட டெல்லி அணிக்காக விளையாடிய அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.