
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 5 விக்கெட் வித்யாசத்தில் தோற்ற இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. அந்தத் தோல்விக்கு பேட்டிங் துறையில் பெரிய ரன்கள் எடுத்தும் வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்யாதது முக்கிய காரணமானது. அதே போல ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்கள் கேட்ச்களை தவற விட்டது தோல்வியைக் கொடுத்தது.
அது மட்டுமின்றி ஜஸ்பிரித் பும்ரா தனி ஒருவனாக 5 விக்கெட்டுகளை எடுத்துப் போராடினார். ஆனால் அவருக்கு மற்ற பவுலர்கள் சிறப்பாக பௌலிங் செய்து கை கொடுக்காததும் தோல்விக்கு வித்திட்டது. குறிப்பாக 2021 இங்கிலாந்து தொடரில் விளையாடிய அனுபவத்தைக் கொண்ட முகமது சிராஜ் மிகவும் சராசரியாகவே பௌலிங் செய்து இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுத்தார்.
முன்னதாக எப்படி நன்றாக பவுலிங் செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தாத அவர் ஹரி ப்ரூக் உள்ளிட்ட எதிரணி பேட்ஸ்மேன்களிடம் ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை எடுக்கிறேன் என்ற பெயரில் வம்பிழுத்தார். கடைசியில் அது சிராஜ்க்கு அடி வாங்கிக் கொடுத்ததே தவிர விக்கெட்டை கொடுக்கவில்லை. இந்நிலையில் ஸ்லெட்ஜிங் செய்து விக்கெட்டை எடுக்க முயற்சிக்கும் முகமது சிராஜ் இந்தியாவுக்காக இதயத்திலிருந்து விளையாடுவதாக சில ரசிகர்கள் சொல்வதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
உண்மையில் சிராஜ் இதயத்திலிருந்து விளையாடாமல் நல்ல லைன், லென்த்தை பின்பற்றி விளையாட வேண்டும் என்றும் அவர் சாடியுள்ளார். இது பற்றி கைஃப் பேசியது பின்வருமாறு. “முகமது சிராஜ் மிகவும் கடினமாக தம்முடைய இதயத்தில் இருந்து பவுலிங் செய்வதாக மக்கள் சொல்கிறார்கள். சார் உங்களுடைய இதயத்திலிருந்து பௌலிங் செய்யாதீர்கள்”
“உங்களுடைய மூளையை வைத்து விக்கெட்டுகளை பெற்றுக் கொடுக்கும் லைன், லென்த் ஆகியவற்றைப் பின்பற்றி பவுலிங் செய்யுங்கள். ஜஸ்ப்ரித் பும்ரா ஏன் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட் எடுக்கவில்லை? ஏனெனில் அவருக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தை விளையாடி சிராஜ், பிரசித் உள்ளிட்ட மற்ற பவுலர்களை அட்டாக் செய்தனர்”
இதையும் படிங்க: தப்பை ஒத்துகிறேன்.. 4 மணி நேரமாகி கெடுப்போக அவங்க தான் காரணம்.. கம்பேக் கொடுப்பேன்.. பிரிதிவி பேட்டி
“பும்ராவை 4 – 5 ஓவர்கள் சிறப்பாக எதிர்கொண்டு விட்டால் போட்டியின் திட்டம் மிகவும் எளிதாகி விடும். இதே பவுலிங் வரிசையில் இஷாந்த் சர்மா, ஷமி, பும்ராவை ஆகியோரை வைத்து சுப்மன் கில்லிடம் கொடுங்கள். அவர்களை வைத்து கில் வெற்றி பெற்றிருப்பார் என்று நான் கேரண்டியாக உங்களிடம் சொல்வேன். இங்கிலாந்து போன்ற வெளிநாட்டில் எப்படி 20 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது தெரிந்த பவுலர்கள் நம்மிடம் இருக்கிறார்கள்” என்று கூறினார்.