- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தெ.ஆ மண்ணில் அந்த சவாலை சமாளிச்சு இந்தியா 2027 உ.கோ ஜெய்க்க.. விராட், ரோஹித் வேணும்.. ஃகைப் உறுதி

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதனால் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்படித்தான் அவர்களை பிசிசிஐ கழற்றி விட்டது.

இத்தனைக்கும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருது வென்று கேப்டனாக இந்தியா கோப்பையை வெல்ல உதவினார். அத்தொடரின் அரையிறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற விராட் கோலி தம்மை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார். இருப்பினும் 2027இல் 40, 38 வயதில் அவர்களால் அசத்த முடியாது என்று தேர்வுக்குழு கருதுகிறது.

- Advertisement -

இழப்பு இந்தியாவுக்கே:

அதனாலேயே அவர்களை இப்போதே கழற்றி விடத் துவங்கியுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையிலான புதிய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பையை இந்தியா வெல்ல விராட், ரோஹித் விளையாடுவது அவசியம் என்று முகமது கைஃப் கூறியுள்ளார். ஏனெனில் பவுன்ஸ் மற்றும் வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்களைக் தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா உலகக் கோப்பை வெல்ல விராட், ரோஹித் போன்ற அனுபவ வீரர்கள் தேவை என்று அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக ரோஹித் விளையாடுவார். கேப்டன்ஷிப் பொறுப்பு எடுக்கப்பட்டாலும் ஓப்பனிங்கில் ரோஹித் தம்முடைய வேலையை செய்வார் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய அணியில் அனுபவமிக்க பேட்ஸ்மேன் தேவை. தென்னாப்பிரிக்காவுக்கு நீங்கள் முற்றிலும் இளமையான அணியுடன் செல்ல முடியாது”

- Advertisement -

கைப் கருத்து:

“ஏனெனில் சில நேரங்களில் அங்கு பவுன்ஸ்க்கு சாதகமான ஆடுகளங்களில் பந்து அதிகமாக நகர்ந்தால் உங்களுடைய இளம் அணி தடுமாறக்கூடும். அங்கே புதிய வீரர்களை எடுத்துச் சென்றால் உங்களுடைய தடுமாற்றம் அம்பலமாகும். அங்கே தான் பவுன்ஸ் பந்துகளை ஃபுல் மற்றும் ஃகட் ஷாட்டுகளாக அடிக்கக்கூடிய அனுபவம் மிகுந்த ரோஹித் சர்மா போன்றவர் தேவை என்று நான் சொல்லுகிறேன்”

இதையும் படிங்க: அவுட்ன்னு தெரிஞ்சும் நிரூபிக்கலன்னு கொடுக்கல.. அம்பயர் மீது ஜஸ்ப்ரித் பும்ரா அதிருப்தி.. நடந்தது என்ன?

“பந்து எழும்பி வரக்கூடிய தென்னாப்பிரிக்கா போன்ற சூழ்நிலைகள் ரோஹித் சர்மாவின் ஆட்டத்திற்கு கச்சிதமாக பொருந்தும். அவருடைய அனுபவத்தையும் நம்பர்களையும் பாருங்கள். உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் விராட் மற்றும் ரோஹித் சர்மா உங்களுக்குத் தேவை. உலகக் கோப்பையில் ஓரிரு போட்டிகளில் நீங்கள் தோற்றால் கம்பேக் கொடுக்க வேண்டும். வாழ்வா – சாவா சூழ்நிலைகளில் வென்றால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்ல முடியும். அங்கே தான் விராட், ரோஹித் வேலை முக்கியமாக இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -