- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2024 டி20 உ .கோ மாதிரி.. இந்தியா சாம்பியன்ஸ் ட்ராபி ஜெய்க்க அந்த 2 பேரும் வேணும்.. கைப் வெளிப்படை

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அந்த தொடரில் இந்திய அணி தங்களுடைய போட்டிகளை துபாய் மண்ணில் விளையாட உள்ளது. அந்த தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2013க்குப்பின் 12 வருடங்கள் கழித்து சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும் முனைப்புடன் இந்தியா தயாராகி வருகிறது.

முன்னதாக அந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு பேட்டிங் துறையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா அசத்துவது அவசியமாகிறது. ஆனால் சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவர்கள் மோசமாக பேட்டிங் செய்தார்கள். அதன் காரணமாக சுமாரான ஃபார்மில் இருக்கும் அவர்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்தியாவின் வெற்றிக்கு:

சொல்லப்போனால் 36 வயதை கடந்து விட்ட அவர்கள் ஓய்வு பெற்று வருங்கால வீரர்களுக்கு வழி விடலாம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல வேண்டுமெனில் ரோகித் சர்மா, விராட் கோலி அசத்துவது அவசியம் என்று முகமது கைஃப் கூறியுள்ளார். சுமாரான ஃபார்மில் இருந்தாலும் கடைசி முறையாக விளையாடுகிறார்கள் என்பதால் அவர்களுக்கு ரசிகர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி கைப் பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மா, விராட் கோலி இந்திய மூவர்ணக் கொடியை பிடித்திருக்கும் புகைப்படம் என் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 2023 உலகக்கோப்பை ஃபைனலில் தோல்வியை சந்தித்த பின் திடமாக மாறிய அவர்கள் டி20 உலகக் கோப்பையை வென்றார்கள். அதே போல சாம்பியன்ஸ் டிராபியை நீங்கள் வெல்வதற்கு அவர்கள் தேவை”

- Advertisement -

கோலி, ரோஹித் தேவை:

“ஒருவர் 37, மற்றொருவர் 36 வயதை கடந்துள்ளனர். எனவே அவர்கள் நீண்ட காலம் விளையாடப் போவதில்லை. அதனால் அவர்களுக்கு உங்களுடைய ஆசிர்வாதங்களை கொடுங்கள். ஏனெனில் சிறந்த வீரர்களான அவர்கள் இப்போதும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான திறமையைக் கொண்டுள்ளனர். ரோகித் சர்மா அதிரடியான துவக்கத்தை கொடுக்க வேண்டும்”

இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025: தனது வெய்ட்டான இந்திய அணியின்.. பிளேயிங் லெவனை வெளியிட்ட அஸ்வின்

“விராட் கோலி கடைசி வரை நின்று விளையாட வேண்டும். அவர்கள் நன்றாக விளையாடினால் மட்டுமே உங்களால் துபாயில் வெல்ல முடியும். துபாயில் பேட்டிங் கொஞ்சம் கடினமாக இருக்கும். எனவே அங்குள்ள சூழ்நிலைகளுக்கு இந்தியா தங்களை உட்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும். பாகிஸ்தானில் ஃபிளாட்டான பிட்சுகள் இருக்கும் என்பதால் எளிதாக 300 ரன்கள் அடிக்க முடியும்” என்று கூறினார்.

- Advertisement -