- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஜஸ்ப்ரித் பும்ரா சீக்கிரமே டெஸ்டில் ரிட்டையராகப் போறாரு.. அந்த சப்போர்ட் கிடைக்காததே காரணம்.. கைப் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிராக 4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்களை அடித்தது. ஆனால் அடுத்து விளையாடிய இங்கிலாந்து 3வது நாளிலேயே 544/7 ரன்கள் அடித்து முன்னிலைப் பெற்றதால் இந்தியா வெற்றி பெறுவது அசாத்தியமானதாக பார்க்கப்படுகிறது.

அத்துடன் 2015க்குப்பின் ஒரு சேனா வெளிநாட்டு டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்தியா 500க்கும் மேற்பட்ட ரன்களை வாரி வழங்கியுள்ளது. இத்தனைக்கும் அப்போட்டியில் இந்தியாவுக்காக உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுகிறார். ஆனால் அதையும் தாண்டி இந்தியா அந்த மோசமான சாதனையைப் படைத்துள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

- Advertisement -

பும்ரா ஓய்வு பெறுகிறாரா:

இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா இத்தொடர் முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார். ஏனெனில் அவருடைய உடல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான ஒத்துழைப்பைக் கொடுக்கவில்லை என்றும் கைஃப் வருத்தத்துடன் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பேசியுள்ளது பின்வருமாறு.

“அடுத்து வரும் டெஸ்ட் போட்டிகளில் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடுவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் ஓய்வைக் கூட அறிவிக்கலாம். அவர் தன்னுடைய உடலால் தடுமாறுகிறார். அவருடைய உடல் ஒத்துழைக்க மறுக்கிறது அதனாலேயே மான்செஸ்டர் போட்டியில் அவருடைய வேகம் குறைந்து விட்டது. இருப்பினும் அவர் சுயநலமற்ற நபர்”

- Advertisement -

கணிப்பு பொய்யாகணும்:

“நாட்டுக்காக தம்மால் 100% முயற்சிகளைக் கொடுக்க முடியவில்லை, போட்டிகளை வெல்ல முடியவில்லை, விக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை என்று பும்ரா கருதினால் அவர் தொடர்ந்து விளையாட மறுப்பார் என்பதே என்னுடைய தைரியமான உணர்வாகும். அவருடைய வேகம் 125 – 130 அளவுக்கு குறைந்துள்ளது. அவர் எடுத்த ஒரு விக்கெட்டின் கேட்ச்சை கீப்பர் முன்னோக்கி டைவ் அடித்து பிடித்தார்”

“அவருடைய ஆர்வம் அப்படியே இருந்தாலும் ஃபிட்னஸை இழந்துள்ளார். அவருடைய உடல் அவருக்கு ஆதரவளிக்கவில்லை. இப்போட்டியில் அவருடைய சுமாரான பவுலிங் அவரிடம் பிரச்சினை இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. அதனால் அவர் விளையாடுவதை நீங்கள் பார்க்காமல் இருக்கலாம். விராட், ரோஹித், அஸ்வின் சென்றார்கள். தற்போது பும்ரா இல்லாமலும் டெஸ்ட் போட்டிகளைப் பார்க்க இந்திய ரசிகர்கள் பழகிக்கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: டிராவிட், புஜாரா மாதிரி அந்த இடத்தில் சாய் சுதர்சனால் அசத்த முடியும் – ரவிச்சந்திரன் அஷ்வின் நம்பிக்கை

“இருப்பினும் என்னுடைய இந்த கணிப்பு தவறாக வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். ஆனால் இந்தப் போட்டியை பொறுத்த வரை பும்ரா தமக்குத்தானே மகிழ்ச்சியுடன் விளையாடியதாக நான் உணரவில்லை. அவருடைய மனம் கூர்மையாக இருக்கிறது. ஆனால் அவருடைய உடல் தன்னை இழந்து அவருக்கு ஆதரவளிக்கவில்லை” என்று கூறினார்.

- Advertisement -