ரொம்ப ஈஸியா லோக்கல் மேட்ச்ல ஆடுற மாதிரி ஆடுறாரு.. விராட் கோலியை பாராட்டிய – முகமது கைப்

Kaif and Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 11-ஆம் தேதியான நேற்று வடோதரா நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்களை குவித்தது.

விராட் கோலியின் ஆட்டத்தை பாராட்டிய முகமது கைப் :

நியூசிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக டேரல் மிட்சல் 84 ரன்களையும், ஹென்றி நிக்கோல்ஸ் 62 ரன்களையும் குவித்தனர். இந்திய அணி சார்பாக ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தனர். அதனை தொடர்ந்து 301 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 49 ஓவர்களின் முடிவிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 93 ரன்களையும், சுப்மன் கில் 56 ரன்களையும் குவித்திருந்தனர். இந்த போட்டியின் போது சதத்தை தவற விட்டிருந்தாலும் விராட் கோலி பிரமாதமாக விளையாடியது பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர்களை வெளுத்து வாங்கிய விராட் கோலி டெல்லி உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடுவது போன்று இந்திய அணிக்காக விளையாடியுள்ளதாக முன்னாள் இந்திய வீரரான முகமது கைஃப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த ஒரு குறிப்பில் பதியப்பட்டதாவது :

- Advertisement -

விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் டெல்லி உள்ளூர் லீக் போட்டிகளில் விளையாடுவதை போன்று விளையாடுகிறார். நண்பர்களுடன் கேலி செய்கிறார். மைதானத்தில் எப்போதுமே புன்னைகைடன் இருக்கிறார். பந்துவீச்சாளர்களையும் உன்னிப்பாக கவனித்து ஆக்ரோஷமாக விளையாடினாலும், அதேநேரத்தில் தேவையான போது பொறுமை காட்டுகிறார்.

இதையும் படிங்க : காயமடைந்து வெளியேறிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அழைக்கப்பட்ட இளம் வீரர் – முதல் முறையாக வாய்ப்பு

இப்படி இதே பார்மில் அவர் விளையாடினால் நிச்சயம் அடுத்த 5-6 ஆண்டுகள் இந்தியாவிற்காக விளையாட முடியும் என்று பதிவிட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 91 பந்துகளை சந்தித்த விராட் கோலி 8 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 102 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 93 ரன்களை குவித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement