திருமணத்துக்கு பின் பொறுமையான கோலி மாதிரி.. அபிஷேக் முதல் பந்திலேயே அடிக்க இதான் காரணம்.. முகமது ஃகைப்

Mohammed Kaif
- Advertisement -

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானாக விளையாடி வருகிறார். 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் 27000+ ரன்கள் மற்றும் 82 சதங்கள் அடித்துள்ள அவர் இந்திய அணியின் ஏராளமான வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் ஃபிட்னஸ்க்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

முன்னதாக களத்தில் எதிரணிகள் வம்பிழுத்தால் அதற்காக அஞ்சாமல் விராட் கோலி தக்க பதிலடி கொடுப்பதில் சிறந்தவராக அறியப்படுகிறார். சாதாரண விக்கெட் விழுந்தால் அதை பவுலரை விட வெறித்தனமாக கொண்டாடக்கூடிய விராட் கோலி எதிரணிக்கு ஆக்ரோஷமாக பதிலடிகளைக் கொடுப்பார். அப்படிப்பட்ட விராட் கோலி திருமணத்திற்குப் பின் மிகவும் அமைதியாக செயல்படுவதாக முன்னாள் முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

விராட் கோலியின் அமைதி:

அதற்கு தந்தையாகி விட்டோம் என்ற பக்குவத்தை விராட் கோலி பெற்றதே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் விராட் கோலி எதிரணி பவுலர்களை செட்டிலாக விடாமல் முதல் பந்திலேயே அடித்து நொறுக்க முயற்சிப்பார் என்றும் கைஃப் தெரிவித்துள்ளார். அதே போல தற்போதைய அணியில் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே எதிரணி பவுலரை அடித்து நொறுக்க முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இல்லையெனில் எதிரணி பவுலர்கள் அடிக்க விடாமல் ஆரம்பத்திலேயே கடிவாளம் போட்டு விடுவார்கள் என்று விராட் கோலி சொன்னதாகவும் கைஃப் தெரிவித்துள்ளார். இது பற்றி கைஃப் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தற்போது கொஞ்சம் அமைதியாகியுள்ளார். தற்போது அவர் தந்தையாக இருக்கிறார். திருமணத்திற்கு முன் அவர் எப்படி இருந்தார் என்பதற்கும் திருமணத்திற்கு பின் எப்படி இருக்கிறார் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது”

- Advertisement -

அபிஷேக் சர்மாவின் அதிரடி:

“அவரை ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிரான ஒரு போட்டியில் பார்த்தேன். அப்போட்டியில் ககிஸோ ரபாடாவுக்கு எதிராக விராட் கோலி இறங்கி வந்து பவுண்டரி அடித்தார். வேகத்துக்கு சாதகமாக அந்த பிட்ச்சில் அரை சதத்தை அடித்த அவர் போட்டியை வென்றார். அப்போட்டியின் முடிவில் அவரிடம் பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது ஒருவேளை நான் ரபாடாவை ஆரம்பத்திலேயே அட்டாக் செய்யாவிட்டால் அவர் என்னை அடிக்க விடமாட்டார் என்று விராட் கோலி சொன்னார்”

இதையும் படிங்க: வரலாற்று போட்டியில் இந்தியாவால் நெருங்கக் கூட முடியாது.. மைக்கேல் வாகன் கருத்துக்கு ரசிகர்கள் பதிலடி

“எனவே முதல் பந்திலேயே அவரை அடிக்க முயற்சித்தேன் என்றும் சொன்னார். தற்போது அபிஷேக் ஷர்மா அதையே செய்கிறார். கிரிக்கெட்டை பற்றிய புரிதலில் அவருடைய அமைதியில் முன்னேற்றம் இருக்கிறது. நீண்ட வருடங்கள் விளையாடியும் விராட் கோலி தனது ஆட்டத்தை முன்னேற்ற விரும்புகிறார். முதல் நாள் பார்த்ததைப் போலவே அவர் இப்போதும் என்னிடம் நடந்து கொள்கிறார். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை” என்று கூறினார்.

Advertisement