அவருக்காக ஜாம்பாவை சிக்ஸ் அடிக்கக்கூடிய சாம்சனை மறக்கலாமா? கழற்றி விட்ட அகர்கரை சாடிய ஃகைப்

Mohammed Kaif
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாக 2027 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா, விராட் கோலி விளையாடுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது.

அதே போல ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் ஆகியோரும் ஆஸ்திரேலிய தொடரில் கழற்றி விட்டது நிறைய ரசிகர்களிடம் அதிருப்தியை உண்டாக்கியது. குறிப்பாக சஞ்சு சாம்சன் கடைசியாக 2023ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் தம்முடைய ஒருநாள் போட்டியில் விளையாடினார். அப்போட்டியில் தனது முதல் சதத்தை அடித்த அவர் என்ற 2 – 1 (3) கணக்கில் இந்தியா கோப்பை வெல்ல உதவினார்.

- Advertisement -

சாம்சனுக்கு டாட்டா:

ஆனால் அப்போட்டிக்கு பின் 2 வருடங்களாகியும் இதுவரை அவருக்கு அடுத்த ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்த துருவ் ஜுரேலை பேக்-அப் விக்கெட் கீப்பராக தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜாம்பா போன்ற ஸ்பின்னர்களை சிக்ஸர்களாக அடிக்கும் திறமை சாம்சனிடம் இருப்பதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.

எனவே துருவ் ஜுரலை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அவருடைய திறமையை மறந்து விட்டதாகவும் கைஃப் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “துருவ் ஜூரேல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நன்றாக விளையாடி சதத்தை அடித்தார் என்று நான் கருதுகிறேன். மிகவும் கச்சிதமாகவும் ஒழுக்கமாகவும் விளையாடிய அவர் கண்டிப்பாக இந்திய கிரிக்கெட்டின் வருங்காலமாக இருப்பார்”

- Advertisement -

ஃகைப் விமர்சனம்

“அவரிடம் ஒவ்வொரு போட்டியிலும் ஸ்கோர் அடிக்கும் திறமையும் இருக்கிறது. அதற்காக சஞ்சு சாம்சனை கழற்றி விட்டது தவறான முடிவு. ஏனெனில் சாம்சன் வழக்கமாக 5 அல்லது 6வது இடத்தில் விளையாடக்கூடியவர். எனவே மிடில் ஆடரில் அவர் ஜூரேலை விட மிகவும் சிறந்த ஆப்சன்”

இதையும் படிங்க: இதே நிலைமை நாளைக்கு கில்லுக்கும் வரும்.. ரோஹித்தை கழற்றி விட்டதே நல்லது.. கங்குலி பேட்டி

“அந்த இடத்தில் அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிக்சர்களை அடிக்கக் கூடியவர். அதுவே அவருடைய பலமாக இருப்பதை நாம் ஆசியக் கோப்பையில் பார்த்தோம். எனவே ஆஸ்திரேலியாவில் அவர் ஆடம் ஜாம்பா போன்றவரை சிக்சர்கள் அடிப்பார். ஐபிஎல் தொடரில் டாப் 10 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சாம்சனும் இருக்கிறார். எனவே ஆஸ்திரேலியா சூழ்நிலைகளில் அவர் 5 அல்லது 6வது இடத்தில் விளையாடுவதற்கு கச்சிதமாக பொருந்துவார். ஆனால் நாமோ தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜுரேல் போன்றவருக்காக சாம்சன் போன்ற சீராக அசத்தக்கூடியவர்களை மறந்து விடுகிறோம்” என்று கூறினார்.

Advertisement