- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விஐபின்னு நினைக்காம 2021இல் ரிஷப் பண்ட் செஞ்சதை ஃபாலோ பண்ணுங்க.. கோலி, ரோஹித்துக்கு கைப் அட்வைஸ்

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் இந்தியா வரலாறு காணாத தோல்வியை பதிவு செய்தது. அதற்கு சீனியர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது.

அந்த தோல்வியின் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற ஆஸ்திரேலியா தொடரை இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் 2020 – 21 ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் வெற்றிகரமாக செயல்பட்டதற்கு அத்தொடருக்கு முன் உள்ளூர் பயிற்சி போட்டியில் விளையாடியதே காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

கைப் அட்வைஸ்:

எனவே தங்களை விஐபி என்று நினைக்காமல் ரிசப் பண்ட் செய்ததை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தற்போது செய்ய வேண்டும் என்று கைப் கேட்டுக் கொண்டுள்ளார். அதாவது அவர்கள் இருவரும் ரஞ்சிக் கோப்பையில் விளையாடி விட்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வேண்டுமென்று கைஃப் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“அவர்களுக்கு ஃபார்ம் தேவைப்படுகிறது. அவர்கள் ஆஸ்திரேலியாவில் மணிக்கணக்கில் பேட்டிங் செய்ய வேண்டும். ஒருவேளை அவர்கள் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்தால் அது இந்திய அணிக்கு பெரிய உத்வேகத்தை கொடுக்கும். 2020 – 21 ஆஸ்திரேலிய தொடரில் ரிஷப் பண்ட் செயல்பட்டதை இங்கே உங்களுக்கு நான் நினைவூட்டுகிறேன். அவர் அந்த சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தோனி இருந்ததால் விளையாடவில்லை”

- Advertisement -

ரிஷப் பண்ட் போல:

“ஆனால் அவர் தான் காபாவில் வெற்றிக்கான ரன்களை அடித்தார். அவர் டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடினார். குறிப்பாக முதல் போட்டியிலேயே இந்தியா 36க்கு ஆல் அவுட்டாகி நாம் படுதோல்வியை சந்தித்த பின் சஹாவுக்கு பதிலாக அவர் வாய்ப்பு பெற்றார். அந்த வாய்ப்புக்கு முன்பாக ஆஸ்திரேலியாவில் ஒரு உள்ளூர் பயிற்சி போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடினார்”

இதையும் படிங்க: 3 – 1ன்னு ஆஸ்திரேலிய ஜெயிக்கும்.. ஆனா அந்த இந்திய வீரர் அதிக ரன்ஸ் அடிப்பாரு.. பாண்டிங் கணிப்பு

“அந்த போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார். அதனாலேயே பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்ற அவர் வித்தியாசமான வீரராக செயல்பட்டார். எனவே தற்போது நன்றாக விளையாடவில்லை என்று உணரும் வீரர்கள் 100% உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அங்கே நீங்கள் பெரிய காரில், விமானத்தில் செல்வதால் விஐபி போல நடத்தப்படுவீர்கள் என்பதை மறந்து விடுங்கள். ஃபார்முக்கு திரும்ப வேண்டுமெனில் நீங்கள் உள்ளூரில்

- Advertisement -