இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை போராடி தோற்கடித்த இங்கிலாந்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. அந்தப் போட்டியில் 192 ரன்களை துரத்திய இல்லையா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டாப் ஆர்டரில் ராகுல் 33 ரன்களை எடுத்ததைத் தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்கள் யாருமே பெரிய ரன்கள் எடுக்கவில்லை. அதனால் லோயர் ஆர்டரில் டெயில் எண்டர் பேட்ஸ்மேன்களை வைத்துக்கொண்டு ரவீந்திர ஜடேஜா 61* ரன்கள் எடுத்தும் இந்தியாவால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் 4வது நாளிலேயே 4 விக்கெட்டுகளை இழந்தது இந்தியாவின் தோல்விக்கு வித்திட்டதாக முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
5 ஓவரில் 20 ரன்கள்:
அது போன்ற சூழ்நிலையில் ஏதேனும் ஒரு பேட்டிங் ஜோடி ஞானத்துடன் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால் கூட இந்தியா வென்றிருக்கும் என்று அவர் கூறியுள்ளார். அதே போல சோயப் பஷீர், ஜோ ரூட் ஆகிய ஸ்பின்னர்கள் வீசிய 5 ஓவரில் ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்து தலா ஒரு பவுண்டரி அடித்து 20 ரன்கள் எடுத்திருந்தால் இந்தியா வென்றிருக்கும் என்றும் அசாருதீன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாம் நன்றாக பேட்டிங் செய்ததாக தெரியவில்லை. 2வது இன்னிங்ஸை நாம் நேர்மறையாக துவக்கவில்லை. 4வது நாளிலேயே 4 விக்கெட்டுகள் இழந்தால் ஐந்தாவது நாளில் வெல்வது எளிது கிடையாது. அங்கே உங்களுக்கு நல்ல பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டது. போட்டி முடிந்த பின் யார் வேண்டுமானாலும் ஞானத்துடன் இருக்க முடியும் என்று சொல்லலாம்”
அசாருதீன் ஆதங்கம்:
“நமது டெயில் எண்டர் பேட்ஸ்மேன்கள் தைரியமாக விளையாடினார்கள் என்று நான் ஒப்புக்கொண்டு அவர்களை வாழ்த்துவேன். ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்தார். ஆனால் ரூட், பஷீர் ஆகியோர் பவுலிங் செய்த 4 – 5 ஓவர்களை கொஞ்சம் அவர் அதிரடியாக எதிர்கொண்டிருக்கலாம். அங்கே அவர் இன்னும் 15 – 20 ரன்கள் எடுத்திருந்தால் நமது வேலை எளிதாக மாறியிருக்கும்”
இதையும் படிங்க: தெனாவட்டா பேசுனதுக்காகவே சுந்தரை.. விடாம அமுக்க மெக்கல்லம் கட்டம் கட்ட சொன்னாரு.. கலாய்த்த பட்லர்
“ஆனால் அவருடைய பேட்டிங்கை நாம் புகார் செய்ய முடியாது. அவர் பாறையைப் போல் பேட்டிங் செய்தும் நாளின் இறுதியில் இந்திய அணிக்கு சாதகமாக வெற்றி கிடைக்கவில்லை. நாம் இரண்டாவது இன்னிங்ஸில் தவற விட்டோம். ராகுலும் நன்றாக பேட்டிங் செய்தார். ஏதோ ஒரு தருணத்தில் நாம் இங்கிலாந்து பவுலர்களை டாமினேட் செய்ய விட்டு விட்டோம்” என்று கூறினார்.



