வீரர்களை ஒப்பிடுவது தவறு என்றாலும், இவரே உலகின் தலைசிறந்த வீரர் – இந்திய வீரரை புகழ்ந்த முஹம்மது யூசப்

Yusuf

வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒரு சிறந்த வீரர் கிரிக்கெட் விளையாட்டில் கோலாச்சியிருப்பார். அப்படி இதற்கு முன்பு இருந்த காலகட்டத்தில் ஜொலித்த கிரிக்கெட் ஜாம்பவான்களுடன் தற்போது கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்களை ஒப்பிட்டு வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இதற்கு சிறந்த உதராணமாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரை ஆஸ்திரேலியாவின் டான் பிராட் மேனுடன் ஒப்பிடுவதைக் கூறலாம்.

Sachin

ஆனால் கடந்த கால கிரிக்கெட் வீரர்களுடன் நிகழ்கால கிரிக்கெட் வீரர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்று கருத்து கூறியிருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முஹம்மது யூசுப், நிகழ்கால கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டானாக திகழும் விராட் கோலி தான், இந்த காலகட்டத்தின் சிறந்த வீரர் என்றும் கூறியிருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி அபாராமான திறமையுடன் இருக்கிறார். அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு வரும் இதே சூழ்நிலையில் தான், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கும் பாபர் அசாமையும், விராட் கோலியையும் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள் என்று கூறிய முஹம்மது யூசுப், இந்த இருவரில் விராட் கோலியே சிறந்தவர் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் பேசிய அவர், விராட் கோலியின் பேட்டிங் திறமையைத் தாண்டி அவருடைய பயிற்சியைப் பற்றியும் பேசினார், விராட் கோலி மேற்கொள்ளும் பயிற்சிகளை நான் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் சமூக வலைத்தளங்களில் அவர் பயிற்சி செய்யும் வீடியோக்களை பார்த்துள்ளேன். அவருடைய இந்த அற்புதமான ஆட்டத் திறமைக்கு , அவர் மேற்கொள்ளும் இந்த கடினமான உடற் பயிற்சிகளே காரணம். இன்றைய காலகட்டத்தில் கிரிக்கெட் மிக நவீனமாக மாறியிருக்கிறது. மாடர்ன் டே கிரிக்கெட் என்னவென்று என்னைக் கேட்டால், நான் பயிற்சிகளைத்தான் கூறுவேன்.

Kohli

ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களும் தங்களது உடலை கட்டுக்போப்பாக வைத்திருப்பது இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாகும். அந்த விஷயத்தில் விராட் கோலி மிகச் சரியாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 10000 ரன்களை கடக்கவிருக்கும் விராட் கோலி, ஒரு நாள் போட்டிகளில். 12000 ரன்களை அடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் டி20 கிரிக்கெட்டிலும் அற்புதமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

kohli 1

இப்படி மூன்று விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் உயர்தர ஆட்டத்தை வெளிப்படுத்தும் விராட் கோலியின் ஆட்டம் நம்ப முடியாத வகையில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement