இந்த தொடரில் என் டார்கெட் அவரோட விக்கெட் எடுக்குறதுதான் – இளம்வீரர் முகமது சிராஜ் சவால்

Siraj
- Advertisement -

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான முகமத் சிராஜ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமாகி அந்த தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல மிக முக்கியமான காரணமாக இருந்தார். 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 13 விக்கெட்டுகளை கைப்பற்றி அதுமட்டுமின்றி ஒருமுறை 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய அசத்தியிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது நடைபெற உள்ள இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் முக்கிய வீரராக அணியில் பங்கேற்று உள்ளார்.

siraj

- Advertisement -

ஏற்கனவே இந்தியாவில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பிடித்திருந்த அவர் இரண்டு போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் கவுண்டி அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடர் குறித்து பேட்டி அளித்துள்ள சிராஜ் கூறுகையில் :

ஆஸ்திரேலிய தொடரின் போது நான் நிறைய விடங்களை கற்றுக் கொண்டேன். ரகானே தலைமையிலான அணியின் கீழ் விளையாடியது சிறப்பாக இருந்தது. அவர் என்னை எப்பொழுதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். இன்றுவரை அந்த ஆஸ்திரேலிய தொடரை நினைக்கும் போதும், அந்த கோப்பையை கையில் ஏந்தியதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.
அதேபோன்று இங்கிலாந்திலும் தொடரை வென்று அந்த கோப்பையை கையிலேந்த ஆசைப்படுகிறேன்.

siraj 2

இப்போது நான் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறேன். நிச்சயம் இந்திய அணியால் இந்த இங்கிலாந்து அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று கூறினார். மேலும் தொடர்ந்து கூறுகையில் : நிச்சயம் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை அவர்களது மண்ணில் விழ்த்தி இம்முறை கோப்பையை கைப்பற்ற முடியும்.

siraj

மேலும் இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஜோ ரூட்டின் விக்கெட்டை வீழ்த்துவது தான் என்னோட ஒரே இலக்கு. அவரை ஏற்கனவே இந்திய மண்ணில் வீழ்த்தி இருந்தாலும் தற்போது அவர்களது மண்ணில் அவரை வீழ்த்த ஆசைப்படுகிறேன். மேலும் என்னால் முடிந்த அளவு நிறைய விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு பங்காற்றுவேன் என சிராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement