தனது தந்தையின் இறப்பிற்கு வரமுடியாமல் துக்கத்தில் இருக்கும் சிராஜ் கூறிய வார்த்தைகள் – விவரம் இதோ

Siraj

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய டி20 அணியில் இடம்பிடித்த சிராஜ் இதுவரை 3 டி20 போட்டியிலும், ஒரு ஒருநாள் போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் . இந்நிலையில் தற்போது சற்று நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றுள்ளார்.

Siraj 2

டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ள சிராஜ் இந்திய நீ வீரர்களுடன் ஏற்கனவே ஆஸ்திரேலியா பயணமாகி இருக்கிறார். இந்திய அணி ஆஸ்திரேலிய சென்ற பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் முகமது சிராஜ் தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் வேளையில் அவரது தந்தை முகமது கவுஸ் நுரையீரல் தொற்று காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது தந்தையின் வயது 53.

இவரின் இறப்பு செய்தி தற்போது சிராஜ்ற்கு பேரிடியாக அமைந்துள்ளது. மேலும் சோகத்தில் இருக்கும் அவரை இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தேற்றி உள்ளனர். இந்நிலையில் தனது தந்தையின் இறுதிச் சடங்குகள் நடைபெற இருக்கும் என்று அவரால் அந்த சடங்கில் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால் அவரால் இந்தியா வரமுடியாது.

Siraj 1

இந்நிலையில் தற்போது தன் தந்தையின் மரண செய்தி அறிந்த சிராஜ் தனது வருத்தத்தை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்த விடயம் எனக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவை நான் இன்று இழந்துள்ளேன். “என் மகனே நீ என் நாட்டை பெருமைப்படுத்த வேண்டும்” என்று என் அப்பா அப்பா எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார் .அவரின் ஆசை அதுவாகத்தான் இருக்கும். அவருக்காக நான் இதைச் செய்வேன்.

- Advertisement -

எனது ஆரம்ப காலகட்டத்தில் எனக்காக என் தந்தை மிகவும் கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளார். நான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய ஆதரவை இழந்து உள்ளேன். நான் நாட்டிற்காக விளையாடுவதை பார்ப்பது அவருடைய கனவாக இருந்தது. அதை உணர்ந்து அவருக்கு மகிழ்ச்சியை கொண்டு வருவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் என்னை தைரியமாக இருக்க சொன்னார்கள். எல்லா ஆதரவையும் அவர்கள் எனக்காக வழங்குகிறார்கள் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

siraj

மேலும் ஆட்டோ டிரைவரான சிராஜின் தந்தை அவரின் கிரிக்கெட் பயிற்சியை தொடர தீவிரமாக உழைத்தார். அதன் பின்னரே தற்போது சிராஜ் ஐபிஎல்லில் விளையாடி இந்திய அணியில் இடம் பிடித்தார். இந்நிலையில் அவரது தந்தையின் இழப்பு சிராஜ்க்கு பெரிய இடியாக விழுந்துள்ளது. முகமது சிராஜ் மற்றும் அவரது குடும்பத்திற்கு சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களும் தங்களது ஆறுதல்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.