பயிற்சியின் போது பந்து தாக்கி தரையில் சரிந்த இந்திய வீரர் – முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல்

Agarwal
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது நாளை மறுதினம் முதல் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த துவக்க வீரர் சுப்மன் கில் ஏற்கனவே காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போதைய இந்திய அணியில் ரோகித் சர்மாவுடன் மாயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்குவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது.

agarwal 1

- Advertisement -

இந்நிலையில் போட்டி துவங்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய பயிற்சியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வீசிய பவுன்சர் பந்தை எதிர்கொண்ட அகர்வால் பலத்த அடிபட்டு பேட்டிங் செய்த இடத்திலேயே சரிந்துள்ளார்.

இதனைக் கண்ட வீரர்கள் மற்றும் ஊழியர்கள் அருகில் சென்று விசாரித்தபோது தலையைத் தாங்கிப் பிடித்தபடி அகர்வால் மைதானத்தில் இருந்து வெளியேறி மருத்துவ குழுவின் அறைக்கு சென்றார். அதன் பிறகு தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அகர்வால் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

agarwal 2

இந்த விடயம் மாயங்க் அகர்வாலுக்கு அதிர்ச்சி அளித்தாலும் ராகுலுக்கு சற்று சாதகமான விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த ராகுல் இந்த இங்கிலாந்து தொடரில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் இந்த தொடரில் துவக்க வீரராக இடம்பெற்ற கில்லுக்கு ஏற்கனவே காயம் ஏற்பட அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறினார்.

Rahul

அதன் பின்னர் தற்போது அகர்வாலுக்கு ஏற்பட்டுள்ள இந்த காயம் காரணமாக ராகுல் அணியில் விளையாடுவது உறுதியாகி உள்ளது. இதனால் நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ராகுல் மற்றும் ரோகித் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement