தந்தையின் இறப்பிற்கு கூட நாடு திரும்ப முடியாமல் இக்கட்டில் சிக்கிய சிராஜ் – ரசிகர்கள் வருத்தம்

Siraj

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சென்று விட்டது. அங்கு டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர் என மிக நீண்ட தொடர் நடக்க இருக்கிறது. இதற்காக மூன்று விதமான அணிகள் அறிவிக்கப்பட்டு 32 வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று விட்டனர். ஆஸ்திரேலியா சென்றவுடன் அங்கு சிட்னி நகரத்திற்கு வெளியே இருக்கும் மிகப் பெரிய ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Siraj 2

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வைரஸ் இல்லாத வீரர்கள் சிட்னி மைதானத்தில் விளையாட அனுமதிக்கப்படுவார்கள். இப்படி அனைவரும் உயிர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கின்றனர். இதில் பல்வேறு விதிகள் இருக்கிறது. இந்த நேரத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்றிருக்கும் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை நுரையீரல் தொற்று காரணமாக நேற்று இறந்துவிட்டார்

அவரது தந்தை முகமது சிகிச்சை பலனின்றி நேற்று ஹைதராபாத்தில் உயிரிழந்துள்ளார். இவருக்காக ரசிகர்கள் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் உயிர் பாதுகாப்பு வளையத்தில் பல்லாயிரம் கிலோ மீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் முகமது சிராஜ், தனது தந்தை முகம்மதுவின் இறுதிச்சடங்கிற்கு வருவாரா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

Siraj

ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கையில் அவர் இந்தியாவிற்கு வருவதற்கான சாத்தியம் இல்லாமல் போனது. மேலும் கிட்டத்தட்ட அவரால் பங்கேற்க முடியாது என்றுதான் கூறப்படுகிறது. கொரோனா மருத்துவ பாதுகாப்பு வட்டத்திற்குள் அவர் தனிமைப்படுத்த பட்டுள்ளதால் அவரால் அதிலிருந்து வெளியேற முடியாது.

- Advertisement -

siraj 1

ஒருவேளை அவர் இந்தியாவிற்கு வந்து விட்டால் அவரால் டெஸ்ட் தொடரில் ஆடுவது மிகவும் கடினமாகிவிடும். இதனால் அவர் இந்தியா திரும்பமாட்டார் என்றும் டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னரே அவர் இந்தியா திரும்புவார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே விராட் கோலி எனக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதன் காரணமாக கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.