இந்திய அணிக்கு தோனி விளையாடிய கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் ஆகிறது. உலக கோப்பை தொடரில் போட்டிக்குப் பின்னர் பல தொடர்களில் தானாகவே விருப்ப ஓய்வு எடுத்துக்கொண்டார். இதன் காரணமாக அவரது ஒப்பந்தத்தையும் பிசிசிஐ ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் தற்போது ரத்தாகிவிட்டது.

ஒருவேளை இந்த வருடம் ஐபிஎல் தொடர் நடக்கவே இல்லை என்றால் தோனி மீண்டும் இந்திய அணிக்கு விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இந்நிலையில் தோனியை ஆசானாய் நினைக்கும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்கள் பலர் மீண்டும் அவர் களத்திற்கு வந்து ஆட வேண்டும் எனவும், தங்களை வழி நடத்தவேண்டும் எனவும் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கூறுகையில்…தோனியின் தலைமையில் ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே ஆடவில்லை. மற்றபடி மற்ற அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடி இருக்கிறேன். அணி வீரர்களை சரியாக வழி நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. நாம் ஒரு மிகப்பெரிய ஜாம்பவான் தோனியுடன் பழகுகிறோம் என்ற எண்ணமே நமக்கு வராது.

அந்த அளவிற்கு வீரர்களை சக நண்பனை போல அவர் நடத்துவார். அவர் ஒரு மிகப்பெரிய வீரர். அவருடன் சேர்ந்து பயணித்ததில் எனக்கு ஏராளமான நினைவுகள் இருக்கிறது. தோனி இப்போதும் களத்திற்குள் வருவார், அவர் விளையாடுவார், என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். அவர் விளையாடுவது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் தோனி வீரர்களுடன் அமர்ந்து பேசுவதும், இரவில் நீண்டநேரம் அமர்ந்து அரட்டை அடிப்பதும் மிகவும் பிடித்த விடயம் என்று முஹமது ஷமி கூறியது குறிப்பிடத்தக்கது. தோனியின் வருகை குறித்தும் ஓய்வு குறித்தும் பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது ஷமி கூறிய இந்த தகவல் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



