3 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு திரும்ப இருக்கும் நட்சத்திர வீரர் – உறுதியான தகவல் இதோ

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பங்கேற்க்க உள்ளார். சமீபமத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஏற்பட்ட காயம் காரணமாக முகமது ஷமி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் பயிற்சி எடுக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷமி வெளியிட்டார். இதில் ஷமியும் சைனியும் இணைந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷமி மற்றும் சைனி இருவரும் முதல் இரண்டு போட்டிகளுக்கு ஓய்வு அளித்த நிலையில் தற்பொழுது இருவரும் இணைந்து பயிற்சி எடுத்தது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஷமியின் காயம் சீராக குணமாகிக்கொண்டு இருக்கிறது என மருத்துவ குழு தெரிவித்துள்ள நிலையில் இந்த வாரம் முழுவதும் லோ இன்டன்சிடி பயிற்சி அளிக்கப்படும் என்றும் , அடுத்த வாரம் மீடியம் இன்டன்சிடி பயிற்சி அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் முழுவேகத்துடன் அகமதாபாத்தில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முகமது ஷமி பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக இருப்பதால் அந்த போட்டியில் அனுபவ வீரரரான முகமது ஷமி திரும்ப இருப்பது இந்திய அணிக்கு சற்று பலத்தை கூட்டியுள்ளது. ஷமியும் தனது வழக்கமான சிறப்பான பவுலிங்கை காண்பிப்பார் என நாம் எதிர்பார்க்கலாம்.

Advertisement