கங்குலியை சிறுவயதிலேயே மிரளவிட்டு தற்போது இந்திய அணியில் கலக்கும் வீரர் – பிறந்தநாள் சிறப்பு பதிவு

Shami-1

இந்திய அணியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கியதில்லை எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு ஆதரவாகவும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஆதரவாகவும் தான் இருந்துள்ளது. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் அதிக பேட்ஸ்மேன்கள் உருவாகினர். சுழற்பந்து வீச்சாளர்களும் அதிகமாக உருவாகினர். இவர்களை வைத்தே உலகமெங்கிலும் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது

பெரிதாக பெயர் சொல்லும் அளவிற்கு வேகப்பந்து வீச்சாளர்கள் உருவானதில் கபில்தேவ் தேவ், ஜவகல் ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத் போன்ற ஒரு சில வீரர்களை வேகப்பந்து வீச்சாளர்கள் ஆனால் தற்போதைய காலகட்டத்தில் நிலைமை மாறிவிட்டது

தற்போதைய இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது உலகை ஆண்டு வருகிறார்கள். இஷாந்த் சர்மாவும் அப்படித்தான், பட்டையைக் கிளப்பி வருகிறார். மேலும் இளம் வேகப்பந்து வீச்சாளர்களான தீபக் சாகர், நவதீப் சைனி, ஷர்துள் தாகூர், சிராஜ் என அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களும் வந்துவிட்டனர்.

Mohammed-Shami

இந்நிலையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் நேற்று தனது 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் குறித்த சிறப்பு பதிவுதான் இது. சிறு வயதில் சிறப்பாக பந்துவீசிய ஷமியை பார்த்த அவரது தந்தை மேற்குவங்க கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சிக்கு சேர்த்துள்ளார். அப்போது அவர் தனது இளம் வயதில் மேற்குவங்க அணியின் கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலிக்கு வலைப்பயிற்சியில் பந்து வீசி இருக்கிறார்.

- Advertisement -

Shami

அதனை பார்த்து மிரண்டுபோன சௌரவ் கங்குலி இந்த இளைஞனனை கொஞ்சம் அதிகமாக கவனியுங்கள் அவர் இந்திய அணியில் சாதிப்பார் என்று பயிற்சியாளரிடம் கோரிக்கை விடுத்து விட்டு சென்றிருக்கிறார். இதன்பிறகு படிப்படியாக தனது திறமையின் மூலம் இந்திய அணிக்கு அறிமுகமானார் முகமது சமி.

தற்போது வரை இந்திய அணிக்காக 77 ஒருநாள் போட்டியில் ஆடி 144 விக்கெட்டுகளையும், 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 180 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். மேலும் உலகக்கோப்பை ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடப் போகிறார் முகமது சமி.