சுயநலவாதின்னு சொன்னாலும் அதை மட்டும் செய்யாதீங்க.. பாகிஸ்தான் போட்டிக்கு முன் கோலிக்கு ஃகைப் கோரிக்கை

Mohammad Kaif 4
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஜூன் ஒன்பதாம் தேதி மோதுகின்றன. கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டி எப்போதுமே பிரசித்தி பெற்றதாகும். இம்முறை அமெரிக்கா அணியிடம் தங்களுடைய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறது.

எனவே இம்முறை பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெல்லும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னதாக கடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை வரலாற்றின் மகத்தான இன்னிங்ஸ் விளையாடி காப்பாற்றிய விராட் கோலி அபாரமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

கைப் கோரிக்கை:
2024 ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய விராட் கோலி சுயநலத்திற்காக விளையாடுவதாக விமர்சனங்களை சந்தித்தார். அதனால் கடைசிக்கட்ட போட்டிகளில் அதிரடியாக விளையாடிய அவர் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றி 741 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.

இந்நிலையில் சுயநலவாதி என்பது உட்பட யார் என்ன சொன்னாலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சீரான ஸ்டிரைக் ரேட்டில் தம்முடைய இயற்கையான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்று முகமது கைப் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கான காரணம் பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தானை மறந்து விடுங்கள் விராட் கோலி எந்த அணிக்கும் ஆபத்தானவர்”

- Advertisement -

“எந்த அணியாக இருந்தாலும் அவரை அவுட்டாக்குவதை கடினமாக உணர்வார்கள். இருப்பினும் அவர் தன்னுடைய ஆக்ரோசத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கருதுகிறேன். கடந்த போட்டியில் அவர் 5 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்த போது இறங்கி சென்று அதிரடியாக விளையாட முயற்சித்து அவுட்டானார். ஐபிஎல் தொடரில் 700 ரன்கள் அடித்த விராட் கோலி அற்புதமான ஃபார்மில் இருக்கிறார்”

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் ஜாம்பவான் லாசித் மலிங்காவின் சாதனையை முறியடித்த வனிந்து ஹஸரங்கா – விவரம் இதோ

“பவர் பிளே ஓவர்களில் அவரால் அதிரடியாக சிக்சர் மற்றும் பவுண்டரிகளை அடிக்க முடியும் என்பதை நாம் பார்த்தோம். எனவே அவரால் எந்த வகையான ஷாட்டையும் அடிக்க முடியும். ஆனால் அவர் தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக 140 – 150 ஸ்ட்ரைக் ரேட்டில் அல்லாமல் 130 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாட வேண்டும். 15 – 20 ஓவர்கள் நங்கூரமாக விளையாடி 60 – 70 ரன்கள் எடுப்பதே அவருடைய வேலையாகும். எனவே அவர் நேரம் எடுத்து மோசமான பந்துகளை அடித்து 70 எடுத்தால் கூட அது நல்ல ஆட்டமாகும்” என்று கூறினார்.

Advertisement