ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. இந்த வருடம் அயர்லாந்தை முதல் போட்டியில் வீழ்த்திய இந்தியா 2வது போட்டியில் பாகிஸ்தானை வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து மறக்க முடியாத வெற்றியை பதிவு செய்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 3வது போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
அதனால் குரூப் ஏ பிரிவிலிருந்து இந்தியா சூப்பர் 8 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இருப்பினும் இந்த தொடரில் துவக்க வீரராக களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சுமாராக விளையாடி வருவது ரசிகர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் 3வது இடத்தில் களமிறங்கிய அவர் டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்து 2 தொடர்நாயகன் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
கைப் கோரிக்கை:
ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக ஆரஞ்சு தொப்பியை வென்றதால் இம்முறை அவரை இந்திய அணி நிர்வாகம் ஓப்பனிங்கில் களமிறக்கியுள்ளது. அந்த வாய்ப்பில் 1, 4, 0 என இதுவரை ஒற்றை ரன்களில் விராட் கோலி அவுட்டானதால் மீண்டும் 3வது இடத்தில் களமிறக்குமாறு கோரிக்கைகள் குவிந்து வருகின்றன. ஏனெனில் டி20 உலகக் கோப்பையில் 3வது இடத்தை தவிர்த்து விளையாடிய 4 இன்னிங்ஸில் அவர் 3 முறை ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகியுள்ளார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடர் போல இந்த உலகக் கோப்பையில் ஃபிளாட்டான பிட்ச்கள் கிடையாது என்று முகமது கைப் தெரிவித்துள்ளார். எனவே விராட் கோலியை 3வது இடத்தில் களமிறக்குங்கள் என்று வெளிப்படையாக கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ட்விட்டரில் பேசியுள்ளது பின்வருமாறு. “இங்கே பேட்டிங் சுலபமாக இல்லாத வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் விராட் கோலி ஓப்பனிங்கில் விளையாடுகிறார்”
“ஐபிஎல் போல ஃபிளாட்டான பிட்ச்கள் இல்லையெனில் அங்கே நீங்கள் பேட்டிங் செய்வது மிகவும் கடினம். ஐபிஎல் தொடரில் அங்கே விராட் கோலி ஆக்ரோஷமாகவும் அற்புதமாகவும் விளையாடினார். ஆனால் இங்கே அவர் ஆக்ரோஷமாக விளையாடாமல் தன்னுடைய விக்கெட்டை பாதுகாத்து விளையாட வேண்டும். எனவே விராட் கோலி மூன்றாவது இடத்தில் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாட வேண்டும்”
இதையும் படிங்க: இந்தியாவில் பெஞ்சில் தான் இருந்தேன்.. ஆனா நியூஸிலாந்தை வீழ்த்த ஐபிஎல் தான் காரணம்.. ரூத்தர்போர்ட் பேட்டி
“அவர் நேரம் எடுத்து சூழ்நிலையை அறிந்து செட்டிலாகி 50 – 60 ரன்கள் எடுத்தால் கூட நல்லது. கடந்த உலகக் கோப்பைகளில் அவருடைய புள்ளிவிவரங்கள் அற்புதமாக இருக்கிறது. மறுபுறம் 5வது இடத்திலிருந்து ரிஷப் பண்ட் 3வது இடத்தில் விளையாட முடியுமானால் அவரால் ஓப்பனிங்கிலும் களமிறங்க முடியும். அங்கே உங்களுக்கு ரோஹித் – ரிஷப் பண்ட் ஆகிய இடது வல