தனக்கு கிடைக்கும் பொன்னான வாய்ப்புகளை வீணடிக்கிறார். இப்படியே போன அவ்ளோதான் – இளம்வீரரை எச்சரித்த கைப்

Kaif
- Advertisement -

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று தொடரை இழந்தது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை வென்றது.
டி20 தொடரை இந்திய அணி வெல்வதற்கு தமிழகத்தைச் சேர்ந்த தங்கராஜ் நடராஜனின் பந்துவீச்சு தான் முக்கிய காரணமாக அமைந்திருந்தது. இந்த டி20 தொடரின் 3 போட்டிகளிலும் இடம்பெற்றிருந்த நடராஜன் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதையடுத்து ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கும் சிறப்பாக இருந்தது.

INDvsAUS

- Advertisement -

இருப்பினும் இந்திய அணியில் மீண்டும் மிடில் ஆர்டர் பிரச்சினை ஏற்பட்டது. 4 ஆவது இடத்திற்கு ஏற்கனவே செட் பேட்ஸ்மேனாக இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ஐபிஎல் தொடரில் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்த சஞ்சு சாம்சன் களமிறக்கப்பட்டார். ஆனால் சஞ்சு சாம்சன் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார்.

இவர் தனது முதல் டி20 போட்டியில் 15 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை இழந்தார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டியில் 10 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுக்க மூன்றாவது போட்டியில் 9 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது இந்த சொதப்பலான ஆட்டம் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சஞ்சு சாம்சன் கண்டு வேதனைப்படுவதாக கூறியுள்ளார்.

Samson

அவர் கூறுகையில் “இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் ஐபிஎல் போன்று சிறப்பாக செயல்படவில்லை. அவர் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தனது அணிக்கு தேவையான ரன்களை குவித்து தர வேண்டும். சர்வதேச போட்டிகளில் தற்போது அறிமுகமாகி இருந்தாலும் விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களை முன்னுதாரணமாக வைத்து இயங்க வேண்டும்” என்று சஞ்சு சாம்சனுக்கு அறிவுரை கூறினார் முகமது கைஃப்.

Samson 1

மேலும் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டு வருகிறார். அவருக்குப் பின் இருக்கும் வீரர்களை நினைத்துப் பார்க்கவேண்டும். மும்பை அணியில் பல இளம் வீரர்கள் திறமையாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் இந்திய அணியின் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் தனக்கு கிடைத்த இந்த பொன்னான வாய்ப்பை சஞ்சு சாம்சன் வீணாக்கக் கூடாது என ரசிகர்களும் இணையத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement