தற்போதைய இந்திய அணியில் சிறந்த பீல்டர் யார் ? – முன்னாள் வீரர் கைப் என்ன சொல்லி இருக்காரு பாருங்க

Kaif
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் உலகளவில் சிறந்த பீல்டருமான முஹம்மது கைப் யுவராஜ் சிங்குடன் இணைந்து இந்திய அணியில் அறிமுகமானார். இவர்கள் இருவரும் அசாத்தியமாக பீல்டிங் செய்வதில் வல்லவர்கள். இவர்கள் இருவரது பீல்டிங்கை கண்டு உலகநாடுகள் ஆச்சரியத்தில் மூக்கின் மீது கைவைத்தது என்றே கூறலாம்.

- Advertisement -

அந்த அளவிற்கு இவர்கள் இருவரும் பாயிண்ட் திசையில் பறந்து பறந்து பீல்டிங் செய்ததை நாம் பார்த்திருப்போம். அப்படிப் பந்தை பிடிப்பது அதுமட்டுமின்றி பிடித்த வேகத்தில் பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிவதில் இவர்கள் கில்லாடிகள். அந்த அளவிற்கு தாங்கள் விளையாடிய காலத்தில் பீல் டிங்கில் தங்களது மாயாஜாலத்தை நிகழ்த்தி காட்டினார்கள்.

தற்போதுள்ள இந்திய வீரர்களிடம் யுவராஜ் சிங் மற்றும் தன்னை போன்ற ஒட்டுமொத்த பண்புகள் இல்லை என அவரே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சிறப்பாகச் பந்தை பிடிப்பவர், ஸ்டம்பை அடிக்கடி தாக்கக் கூடிய வகையில் பந்து எறியும் திறமை படைத்தவர், பந்தை நோக்கி வேகமாக ஓடும் திறமை படைத்தவர், மைதானத்தில் பந்து பட்டு திரும்பும் திசை சரியாக கணித்து பிடிக்கும் டெக்னிக் போன்றவைகளை கொண்டவர்கள் தான் முழுமையான தொகுப்பு கொண்ட பீல்டர்கள்.

Yuvi

நாங்கள் விளையாடிய காலத்தில் நானும் யுவராஜ் சிங்கும் சிறந்த பீல்டர்கள் என்ற அடையாளத்தை அழுத்தமாக பதித்தோம். தற்போது உள்ள இந்திய அணியில் உள்ள சிறந்த பீல்டர்களை கண்டு பிடிக்கலாம். ஆனால் அவர்களுக்கு அதற்கு உண்டான முழு பண்பு கொண்டவர்கள் தானா என்பதை என்னால் (நினைக்க) அறிய முடியவில்லை.

Raina

ஒரு வீரராக ஸ்லீப் திசை, ஷார்ட் லெக், லாங் ஆன்,பவுண்டரி லைனில் வேகமாக ஓடி பந்தை பிடிக்க கூடியவர் என அனைத்து திறமைகளும் கொண்ட இந்த பேக்கேஜ் தற்போதைய இந்திய அணியில் மிஸ்ஸிங் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போதுள்ள வீரர்களில் யாரையும் அவர் சிறந்த பீல்டர்கள் என குறிப்பிடவில்லை.

Advertisement