
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் 4 போட்டிகளில் பிரமாதமான வெற்றியை ருசித்த இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பினை உறுதி செய்தது.
அதனை தொடர்ந்து சூப்பர் 8 சுற்றில் விளையாட இருக்கும் இந்திய அணியானது மிகவும் பலமான அணியாக இருப்பதால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதோடு மட்டுமின்றி இறுதிப் போட்டியிலும் இந்திய அணியே வெற்றி பெறும் என்று பலரும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்திய அணியின் பலம் சிறப்பாக இருக்கிறது என்று கூறலாம். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து துறையிலுமே அற்புதமான வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இவ்வேளையில் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா ஐந்தாவது இடத்தில் களமிறங்குவதற்கு என்ன காரணம்? என்பது குறித்து முன்னாள் வீரரான முகமது கைப் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த டி20 தொடரில் ஹார்திக் பாண்டியா ஏன் ஐந்தாவது இடத்தில் களமிறங்குகிறார் என்று எனக்கு தெரியும். ஹார்டிக் பாண்டியா பொதுவாகவே ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய மாட்டார்.
பின்வரிசையில் தான் களமிறங்குவார். ஆனால் இந்த தொடரில் அவர் ஐந்தாவது இடத்தில் களமிறங்குவதற்கு காரணமே அணியில் அதிகளவில் இடது கை ஆட்டக்காரர்கள் இடம் பெற்றிருப்பதால் தான். குறிப்பாக அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், திலக் வர்மா ஆகியோர் முதல் மூன்று இடங்களில் இருப்பதினாலும் பின் வரிசையில் ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல் என அடுத்தடுத்த இடது கை ஆட்டக்காரர்கள் இருப்பதாலும் மிடில் ஓவர்களின் போது வலது கை ஆட்டக்காரர்கள் இருக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க : இந்திய அணியிடம் கண்டிப்பா தென்னாப்பிரிக்கா அணி தோக்கும்.. காரணம் இதுதான் – ரிக்கி பாண்டிங் கருத்து
அந்த வகையில் தான் அணியின் சமநிலை கருத்தில் கொண்டு ஹார்டிக் பாண்டியா சற்று முன்கூட்டியே ஐந்தாவது இடத்தில் விளையாடுகிறார். அதேபோன்று ரிங்கு சிங் பின்வரிசையில் களமிறங்குவது இந்திய அணிக்கு பலம் தான். ஏனெனில் அவர் ஒரு ஐந்து பந்துகளை சந்தித்தால் கூட அதில் இரண்டு அல்லது மூன்று பந்துகளை பவுண்டர்களுக்கு விளாசுவார் என முகமது கைப் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.