பும்ராவுக்கு எதிரா இப்படியா பண்ணுவீங்க? பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சரை சாடிய – முகமது கைப்

Mohammad Kaif
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய வேளையில் இறுதிவரை போராடியும் 170 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ஸ்டோக்ஸ்சும், ஆர்ச்சரும் செய்தது மிகப்பெரிய தவறு : முகமது கைப் விளாசல்

இந்த போட்டியின் போது இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழந்தாலும் பின் வரிசையில் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஒருபுறம் விக்கெட்டை இழக்காமல் தனி ஆளாக போராடினார். இந்த போட்டியில் 181 பந்துகளை சந்தித்த அவர் 61 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

அதேபோன்று இந்திய அணியின் பந்துவீச்சாளர்களான ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரும் ரவீந்திர ஜடேஜாவுடன் இணைந்து வெற்றிக்காக பேட்டிங்கில் போராடியது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்தப் போட்டியின் போது பத்தாவது வீரராக களமிறங்கிய பும்ரா 54 பந்துகளை சந்தித்து 5 ரன்களையும், சிராஜ் 30 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களையும் குவித்தனர்.

இந்நிலையில் இந்த லார்ட்ஸ் போட்டியின் கடைசி இன்னிங்சில் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக பேட்டிங்கில் மிகக் கடுமையாக போராடிய வேளையில் அவருக்கு எதிராக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தொடர்ந்து பவுண்சர்களை வீசி வந்தனர். அதன் காரணமாகவே அவர் இறுதியில் ஆட்டமிழந்தும் வெளியேறியிருந்தார். இந்நிலையில் பும்ராவுக்கு எதிராக ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் செய்தது தவறு என்றும் பும்ராக்கு எதிராக அவர்கள் வைத்திருந்த அந்த பவுன்சர் திட்டம் குறித்தும் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் கூறுகையில் :

- Advertisement -

பும்ரா பேட்டிங் செய்யும்போது இங்கிலாந்து வீரர்களான ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் ஆகியோர் அவரின் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று பந்துவீசவில்லை. அவருடைய விரலிலோ அல்லது தோள் பட்டையிலோ பந்தால் காயத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே தொடர்ச்சியாக அவர்கள் பவுன்சர்களை வீசினர். அப்படி அவர் பவுன்சர் பந்தில் காயம் அடைந்து வெளியேறினால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவரால் விளையாட முடியாது என்பதனாலே அவர்கள் இதுபோன்று செய்துள்ளனர்.

இதையும் படிங்க : பும்ராவையும், சிராஜையும் இந்த விடயத்திற்காக பாராட்டியே ஆகவேண்டும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இப்படி ஒரு பந்துவீச்சாளருக்கு எதிராக தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசுவது சரியான திட்டம் கிடையாது. பும்ராவின் விக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் அவரை காயப்படுத்த வேண்டும் என்று மட்டுமே அவர்கள் நினைத்தனர். இதெல்லாம் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர்கள் இருவரையும் முகமது கைப் கடுமையாக சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement