இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் போட்டிகளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்தியா வரலாறு காணாத ஒய்ட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அந்த காயம் முழுமையாக மறைவதற்குள் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 25 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் இந்தியா படுதோல்வியை சந்தித்துள்ளது.
அந்தப் படுதோல்விகளால் விராட் கோலியை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க பிசிசிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஏனெனில் 36 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் இன்னும் சில வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தேவையான ஃபிட்னஸை கொண்டுள்ளார். அத்துடன் இன்னும் 770 ரன்கள் அடித்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைப்பார்.
முடிவெடுத்தா அவ்ளோ தான்:
இருப்பினும் இனிமேல் தாம் ஒரு ஃபார்மெட்டில் மட்டுமே விளையாட போவதாக ராஞ்சியில் நடைபெற்ற ஒருநாள் போட்டிக்கு பின் விராட் கோலி வெளிப்படையாக தெரிவித்து விட்டார். இந்நிலையில் கிரிக்கெட்டில் சில வீரர்கள் ஓய்வை அறிவித்து விட்டு மீண்டும் வந்து விளையாடுவார்கள் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிடி 5 முறை ஓய்வை அறிவித்து விட்டு மீண்டும் வந்து விளையாடினார்.
ஆனால் அது போன்ற பண்பைக் கொண்டிராத விராட் கோலி ஒருமுறை முடிவெடுத்து விட்டால் மீண்டும் திரும்ப மாட்டார் என்று ஃகைப் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி தாம் எடுக்கும் முடிவுகளில் நிற்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளார். இங்கே நிறைய வீரர்கள் தங்களுடைய ஓய்வு முடிவை திரும்பப் பெற்றுள்ளார்கள். ஆனால் விராட் கோலி அப்படிப்பட்டவர் கிடையாது”
சொல்லின் செல்வன் கோலி:
“ஐபிஎல் தொடரில் கேப்டன்ஷிப் பொறுப்பை விட்ட போது பலரும் அவர் மீண்டும் கேப்டனாக வேண்டும் என்று பேசினார்கள். ஆனால் முடிவெடுத்து விட்ட விராட் கோலியோ ஜூனியர் வீரரானா ரஜத் படிதார் கேப்டனாக ஆதரவளித்தார். அந்த வகையில் பலமுறை சிந்தித்து முடிவெடுக்கும் அவர் அதைப் பின்பற்றும் தைரியத்தைக் கொண்டுள்ளார். மக்கள் விரும்பினாலும் ஒருமுறை முடிவெடுத்து விட்டால் வார்த்தைக்கு மதிப்பளிக்கக்கூடிய விராட் கோலி கம்பேக் கொடுக்க மாட்டார்”
இதையும் படிங்க: 264/9 டூ 325/9.. நேரத்தை வீணடித்த ஆஸியை நொறுக்கிய.. ஜோப்ரா ஆர்ச்சர் – ஜோ ரூட் ஜோடி உலக சாதனை
“தற்போது ஒரு மாதம் கழித்து தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் விளையாடும் அவர் ராஞ்சியில் அற்புதமாக விளையாடி இரட்டை சதமடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். ஆனால் அப்போது சில விக்கெட்டுகள் விழுந்ததால் அவர் தனது ஆட்டத்தை மாற்றினார். இப்போதும் அவர் அவுட்டாக வேண்டுமென்று பலரும் காத்திருக்கிறார்கள். ஆனால் எப்போதும் அவர் தன்னுடைய இடத்துக்காக விளையாடுவதில்லை. இந்தக் காரணத்துக்காக அவர் சிறப்பானவர்” என்று கூறினார்.



