இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே காயத்தை காரணம் காட்டி இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு வருகிறார். ஆனால் தனது காயத்திற்கான சிகிச்சையை மேற்கொண்ட அவர் ரஞ்சி போட்டியிலும் களமிறங்கி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்த வேளையில் அவருக்கு தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
முகமது ஷமி விளையாடியிருக்கனும் : முகமது கைப்
ஆனால் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலும் சரி, ஒருநாள் தொடரிலும் சரி முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்படி அனுபவம் வாய்ந்த வீரர் என்பது மட்டுமின்றி திறமையான பந்துவீச்சாளராக பார்க்கப்படும் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காதது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இவ்வேளையில் தென்னாப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாடியிருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் அவரை தேர்வு செய்யாதது வருத்தம் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இந்திய அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 11 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை எடுத்தாலும் அதன் பின்னர் 332 ரன்கள் வரை விட்டுக் கொடுத்தது. அதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் சுமாரான வெற்றியையே பெற்றது. இப்படி மிகப்பெரிய அளவில் ரன்களை விட்டுக் கொடுக்க அனுபவம் இல்லாத பந்துவீச்சு யூனிட்டு இருப்பதும் ஒரு காரணம் தான்.
முகமது ஷமி போன்ற ஒரு அனுபவ வீரர் இருந்திருந்தால் நிச்சயம் ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் கூட துவக்கத்தில் கிடைத்த விக்கெட்டுகளை வைத்து மேலும் அழுத்தத்தை அதிகரித்து விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்திருப்பார். அதுமட்டும் இன்றி பும்ரா, சிராஜ் போன்ற அனுபவ வீரர்கள் ஓய்வு எடுத்துள்ள வேளையில் ஷமி போன்ற ஒரு வீரர் இருந்தால் இளம் வீரர்களுக்கு அவர் நல்ல பாடங்களை கற்றுக் கொடுத்து மிகச் சிறப்பாக அவர்களை வழிநடத்தி இருப்பார்.
இதையும் படிங்க : 223 சேசிங்கில் 77 ரன்ஸ்.. ஆல் ரவுண்டராக அசத்திய பாண்டியா.. இந்தியாவுக்காக கம்பேக் கொடுக்க தயார்
புதிதாக இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி பயணித்ததால் தான் பெரிய அளவில் ரன்களை விட்டுக் கொடுத்தது. ஒருவேளை ஷமி இருந்திருந்தால் நிச்சயம் இளம் வீரர்களையும் மிகச் சிறப்பாக வழி நடத்தி போட்டியை வெகு விரைவாகவே முடித்து கொடுத்திருப்பார் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



