சுயநலமற்ற கேஎல் ராகுல் இந்திய அணிக்காக.. டிராவிட் மாதிரி இந்த எல்லாத்தையும் செய்றாரு.. ஃகைப் பாராட்டு

Mohammad Kaif 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் தோற்கடித்த நியூசிலாந்து தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 285 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக கே.எல். ராகுல் சதமடித்து 112*, கேப்டன் சுப்மன் கில் 56 ரன்களை எடுத்த போதிலும் மற்ற பேட்ஸ்மேன்கள் 25 ரன்கள் கூட தாண்டவில்லை. அடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 47.3 ஓவரில் 286/3 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டேரில் மிட்சேல் சதமடித்து 131*, வில் எங் 87, கிளன் பிலிப்ஸ் 32* ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர்.

- Advertisement -

சுயநலமற்ற ராகுல்:

அதன் காரணமாக இப்போட்டியில் அற்புதமான சதமடித்த போராடிய கே.எல். ராகுலின் போராட்டம் வீணானது. ஏனெனில் முதலில் விளையாடிய இந்தியா 118/4 என தடுமாறியதால் 250 ரன்கள் தாண்டுமா? என்ற கேள்வி எழுந்தது. அப்போது மிகவும் பொறுப்புடன் கிளாஸ் நிறைந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் தன்னுடைய 8வது சதத்தை அடித்து இந்தியா நல்ல ஸ்கோரை குவிக்க உதவினார்.

இந்நிலையில் ஜாம்பவான் ராகுல் டிராவிட் போல கே.எல். ராகுல் இந்திய அணிக்காக சுயநலமின்றி கொடுக்கப்படும் அனைத்து வேலைகளையும் திறம்பட செய்து முடிப்பதாக முன்னாள் வீரர் முகமது ஃகைப் பாராட்டியுள்ளார். இது பற்றி தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ராகுல் டிராவிட் போல கேஎல் ராகுல் மிகவும் கடினமான வேலைகளைப் பெறுகிறார்”

- Advertisement -

டிராவிட் போல:

“டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடும் அவர் கடினமான ஸ்லிப் பகுதியில் கேட்ச் பிடிக்கும் ஃபீல்டராக நிற்கிறார். தேவைப்படும் சமயத்தில் தற்காலிக கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் செயல்படும் அவர் ஒருநாள் போட்டிகளில் ஃபினிஷராக அசத்துகிறார். தற்போது ராஜ்கோட்டில் டாப் ஆர்டர் நெருப்பாக விளையாடத் தவறிய போது நங்கூரமாக விளையாடிய அவர் சதத்தை அடித்துள்ளார்”

இதையும் படிங்க: ரசிகர்களால் கிரிக்கெட்டின் தாயகமாக மாறியுள்ள இந்தியாவில்.. இது கிடைச்சது திருப்தியா இருக்கு.. வில் எங் பேட்டி

“என்ன ஒரு சுயநலமற்ற கிரிக்கெட்டை விளையாடும் ராகுல் எப்போதும் தமக்கு கொடுக்கப்படும் வேலையை ஏற்றுக் கொள்வதற்காக கையை உயர்த்துகிறார்” என்று பாராட்டியுள்ளார். உண்மையாகவே கைப் கூறுவது போல கேஎல் ராகுல் இந்திய அணியில் கொடுக்கப்படும் வெவ்வேறு வேலைகளுக்கு மறுப்பு சொல்லாமல் விளையாடி வருகிறார். அந்த வேலைகளில் பெரும்பாலும் வெற்றிகரமாக செயல்படும் அவர் தம்மை கிளாஸ் நிறைந்த பிளேயர் என்பதை நிரூபிப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement