ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியானது நேற்று பி.சி.சி.ஐ-யின் மூலம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் வெளியான இந்த அறிவிப்பில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் அளிக்கப்பட்டு முழு வீரர்களின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே பல்வேறு விமர்சனங்கள் இருந்து வருகின்றன.
அக்சர் படேலுக்கு விளக்கம் குடுக்கனும் : முகமது கைப்
அப்படி வெளியான அறிவிப்பில் கடந்த ஓராண்டுக்கு மேலாக டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்த சுப்மன் கில்லுக்கு மீண்டும் கம்பேக் வாய்ப்பு வழங்கப்பட்டதோடு சேர்த்து டி20 போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதனால் அக்சர் பட்டேல் துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இப்படி திடீரென ஒரு வீரரை அணிக்குள் கொண்டு வந்து ஏற்கனவே துணை கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வந்த ஆல்ரவுண்டான அக்சர் பட்டேலை திடீரென பதவி நீக்கம் செய்து புதிய வீரருக்கு பதவியை வழங்கியது பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது.
இருந்தாலும் சுப்மன் கில்லை இந்திய அணியின் நிர்வாகம் அடுத்த நிரந்தர கேப்டனாக பார்ப்பதனால் இப்படி ஒரு பதவியை வழங்கியதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இருப்பினும் அக்சர் பட்டேலுக்கு நடந்தது நியாயமற்ற செயல் என்று ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அக்சர் பட்டேலின் பதவி நீக்கம் குறித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் : துணை கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டது முன்கூட்டியே அவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன். ஒருவேளை அவர் இந்த அறிவிப்பை பத்திரிகையாளர் சந்திப்பில் தான் அதனை தெரிந்து கொள்கிறார் என்றால் நிச்சயம் அவருக்கு சரியான விளக்கத்தை அவர்கள் கொடுக்க வேண்டும்.
இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவின் அந்த திறமை இந்திய அணிக்கு மிகப்பெரிய ஸ்ட்ரென்த் – அபிஷேக் நாயர் பாராட்டு
தன்னுடைய பதவியை ஏன் எடுத்தார்கள்? என்பது குறித்த விளக்கத்தை அறிந்து கொள்ள அக்சர் படேலுக்கு உரிமை உண்டு என ஒரு காட்டமான பதிவினை முகமது கைப் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.



