தோத்தது கூட பரவாயில்ல. இந்திய பேட்ஸ்மேன்கள் செய்த தவறை சுட்டி காட்டிய – அசாருதீன்

Azharuddin

லீட்ஸ் மைதானத்தில் கடைசியாக நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை தழுவியது. இதன் காரணமாக இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது. இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 78 ரன்கள் மட்டுமே குவித்து ஆல்அவுட் ஆனது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ENG

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சின் போது மூன்றாவது நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி நான்காம் நாளில் ஆட்டத்தில் அடுத்த 63 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்களின் இந்தப் பொறுப்பற்ற ஆட்டம் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் இந்திய வீரர்களின் இந்த மோசமான ஆட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : இந்திய அணியின் பேட்டிங் டெக்னிக் மற்றும் செயல்பாடு ஆகியவை இந்த போட்டியில் மோசமாக இருந்தது. ஸ்விங் ஆகும் இந்த பிட்சில் இந்திய அணியின் பேட்டிங் எடுபடவில்லை.

இந்திய அணி வீரர்கள் சிறப்பான பேட்டிங்கை இந்த போட்டியை காண்பிக்கவில்லை. அதுமட்டுமின்றி அட்லீஸ்ட் சிறப்பாக பேட்டிங் செய்து ஐந்தாவது நாள் வரையாவது போட்டியை கொண்டு சென்றிருக்கலாம் என்று அசாருதீன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement