நான் பந்துவீசியதிலேயே இவர்தான் கடினமான பேட்ஸ்மேன். ஆனால் அவர் கோலி இல்லை – முஹம்மது ஆமீர் வெளிப்படை

amir
- Advertisement -

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் முகமது அமீர். தனது 17ம் வயதிலேயே மேட்ச் பிக்சிங் செய்து 5 ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்து தடைபெற்றார். அவர் 2010ஆம் ஆண்டிலிருந்து தடை பெற்று 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார். அதன் பின்னர் 2015 ஆம் ஆண்டு மீண்டும் பந்து வீச துவங்கி தற்போது வரை 36 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார்.

amir

- Advertisement -

மேலும் 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 81 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 119 விக்கெட்டுகளையும், 42 டி20 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். அவரிடம் தற்கால பேட்ஸ்மேன்களில் பந்து வீசுவதற்கு யார் கடினமான பேட்ஸ்மேன் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காத முகமது ஆமீர், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் என்று கூறியுள்ளார்.
அவர்தான் பந்து வீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன் என்றும் பேசியுள்ளார். ஆனால் அனைவரும் விராட் கோலியின் பெயரைத்தான் கூறுவார் என்று எதிர்பார்த்தார்கள். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டிலிருந்து விராட் கோலியை பலமுறை முகமது ஆமீர் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Smith

கடந்த உலக கோப்பை தொடரிலும் முகமது அவரிடம் விராட் கோலி தனது விக்கெட்டை இழந்து உள்ளார் என்பது உண்மை. இதன் காரணமாகத்தான் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயரை கூறி உள்ளார் என்றே தெரிகிறது. இவர் மட்டும் அந்த 5 ஆண்டுகள் தடைபெறாமல் இருந்திருந்தால் உலகளவில் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கும் பந்துவீச்சாளராக திகழும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஆமீர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது வேகம் மற்றும் பவுன்ஸ் மூலம் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கடினமான பவுலராக திகழ்ந்து வருகிறார்.

Advertisement