ஸ்டம்பை தெறிக்கவிட்ட பாக் பவுலர். திகைத்து போய் வாயடைத்து நின்ற ஸ்டோக்ஸ் – வைரலாகும் வீடியோ

Stokes

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பல தடைகளைக் கடந்து தற்போது இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வெற்றிகரமாக துவங்கியுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பெரும்பகுதி மழையால் தடைபட்டது.

pak

இந்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 326 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் வசூல் 156 ரன்கள் குவித்தார். பாபர் அசாம் மற்றும் சதாம் கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. துவக்க வீரர்கள் ரோய் 4 ரன்களிலும், சிப்லி 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

பின்னர் இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்தார் சொந்த மண்ணில் நடைபெறும் ஆட்டங்களில் எப்போதும் சிறப்பாக விளையாடி பொளந்து கட்டும் பென் ஸ்டோக்ஸ் இந்த முறையும் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பந்துகளை சந்தித்து நிலையில் ரன் எதுவும் எடுக்காமல் போல்டாகி வெளியேறினார்.

அவருக்கு அந்த பந்து வீசியது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாஸ். ஏழாவது பந்தை சந்தித்த ஸ்டோக்ஸ் அவரின் பந்தை ஸ்ட்ரைட் ட்ரைவ் அடிக்க முற்பட்டு பந்தை பின்னால் விட்டார். பந்து மிகச்சிறப்பாக ஸ்விங் ஆகி லாவகமாக ஆஃப் ஸ்டம்பை தெரிக்கவிட்டது. 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட பந்து ஸ்டம்பை தெறிக்க விட்டதை கண்டு பென் ஸ்டோக்ஸ் திகைத்து நின்றார். மறுபுறம் இருந்த கேப்டன் ஜோ ரூட்டும் வாயடைத்து நின்றார்.

- Advertisement -

இந்த வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ அதிக அளவில் பகிரப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுடன் இருந்தது. இன்னும் பாகிஸ்தான் அணியை விட இங்கிலாந்து அணி 234 ரன்கள் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.