ஷாகிப் அல் ஹசன் அணியில் இல்லாதது ஒரு விடயத்தில் நல்லதுதான் – புதிய கேப்டன் பேட்டி

Mohamadullah
- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வங்கதேச அணி நேற்று இந்தியா வந்தடைந்தது.

Indban

- Advertisement -

இந்நிலையில் ஐசிசி-யால் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்ட ஷாகிப் அல் ஹசன் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்பதால் அவருக்கு பதிலாக புதிய கேப்டன்களை வங்கதேச கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் டி20 அணியின் கேப்டனான முஹம்மதுல்லா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

ஷகிப் அல் ஹசன் இல்லாதது எங்களை மேலும் உழைக்க உத்வேகத்தை கொடுக்கும் அவரது இழப்பு ஒரு சோகமான விடயம் என்றாலும் ஒரு விதத்தில் நாங்கள் சிறப்பாக விளையாட அது எங்களை உத்வேகப்படுத்தும். மேலும் நாட்டுக்காக விளையாடுவதை விட மிகப்பெரிய கவுரவம் ஏதும் இல்லை. எனவே அணியை வழிநடத்த வேண்டிய முக்கிய பொறுப்பு என்னிடம் உள்ளது.

shakib

அதனால் என்னுடைய ஒட்டுமொத்த சிறப்பான ஆட்டத்தையும் மற்றும் திறனையும் இந்த தொடரில் வெளிப்படுத்துவேன். மேலும் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி இந்த தொடரில் தங்களது திறமையை நிச்சயம் நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன் என்று முஹம்மதுல்லா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement