தங்கையுடன் இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் சமி… ! மனைவி கொடுத்த அதிர்ச்சி தகவல்

shami
- Advertisement -

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர், முகமது ஷமி மற்றும் அவரது மனைவி ஹசின் ஜஹான் தான் சமீப காலமாக இந்திய கிரிக்கெட் உலகின் சர்சைக்குரிய தம்பதிகளாக இருந்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் சமியின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், கொலை முயற்சி, மேட்ச் பிக்சிங் மற்றும் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில், சமி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

mohamadshami

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சமியின் மனைவி ஹசின் ஜஹான் போலீஸிடம், முகமது ஷமி மற்றும் அவரின் சகோதரர் இருவரும் தன்னைக் கொடுமைப்படுத்துகின்றனர் என்றும் கொலை செய்வதாக மிரட்டி வருகின்றனர் எனப் புகார் அளித்தார். மேலும், முகமது ஷமிக்குப் பல பெண்களுடன் தவறான தொடர்பு இருந்து வருவதாகவும், மேட்ச் பிக்ஸிங் போன்ற சூதாட்டத்திலும் ஈடுபட்டுள்ளார் எனப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

hasinjahan

இந்நிலையில் ஹசின் ஜஹான் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டையும் கூறியுள்ளர். சமி தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று மேலும் ஒரு தாக்குதலை சமி மீது வைத்துள்ளார். சமீபத்தில் இதுபற்றி தெரிவித்துள்ளார் ஹசின் ஜஹான் ‘சமி,அவருக்கு தங்கை முறை கொண்ட ஒரு பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். வரும் ரம்ஜான் பண்டிகை முடிந்து 5 நாட்கள் கழித்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறார். இதனால் தனக்கு விவகாரத்து தரும்படியும், இகற்காக பணம் தருவதாகவும் கூறினார் ‘ என்று சமி மீது புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

shami-shami

இதற்கு சமீபத்தில் பதிலளித்துள்ள சமி ‘ஏற்கனவே நான் திருமணம் செய்து கொண்டு பல பிரச்சனைகளில் சிக்கி இருக்கிறேன். இந்நிலையில் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் அளவிற்கு என்னை பைத்தியம் என்று நினைக்கிறீர்களா? ஹசின் ஜஹான் என் மீது வைத்துள்ள பல குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்று. பரவாஇல்லை அவரை நான் என்னுடைய இரண்டாவது திருமணத்திற்கு அழைக்கிறேன்’ என்று சிரித்தபடி கூறியுள்ளர்

Advertisement