இந்திய அணியில் இவரை எப்படி அவுட் ஆக்குறதுனு தெரியல – மொயின் அலி கவலை

Moeen-Ali

ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக முடித்துவிட்டு நாடு திரும்பியுள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அந்த சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா வர இருக்கிறது. அதன்படி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி துவங்குகறது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. முதல் இரண்டு போட்டியும் சென்னையில் நடைபெற அடுத்த இரண்டு போட்டியும் அகமதாபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த தொடரின் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் குறித்து பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் இங்கிலாந்து அணியின் மொயின் அலி இந்த இந்திய தொடர் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இணையத்திற்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் : இந்த தொடரில் விராட் கோலியை எப்படி ஆக்குவது என தெரியவில்லை அவர் ஒரு அருமையான பேட்ஸ்மேன்.

Moeen

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடருக்கு பின்னர் அவருக்கு இன்னும் உத்வேகம் ஆதிக்கத்திற்கும் அதிகரித்திருக்கும். அவரை எப்படி அவுட் ஆக்குவது என தெரியவில்லை ஏனென்றால் அவரிடம் பலவீனமே இல்லை எங்களிடம் திறமை வாய்ந்த பவுலர்கள் இருக்கிறார்கள் இருப்பினும் எங்களிடம் கோலியை வீழ்த்தும் திட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது. அவர் அந்த அளவிற்கு பவுலர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தக்கூடியவர் என்று மொயின் அலி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Kohli-1

சமீப காலமாக அரைசதத்தை கடந்து சதமடிக்கமுடியாமல் இருக்கும் கோலி இந்த இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் சதங்களை விளாசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அவர்க்கு குழந்தை பிறந்த பிறகு பங்கேற்க இருக்கும் முதல் தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.