KKR vs RCB : ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் குல்தீப் யாதவை பிரித்தெடுத்த – பெங்களூரு வீரர்

நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி வீரரான மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். அதிலும் குறிப்பாக 16 ஆவது ஓவரை வீச குல்தீப் யாதவ்

Moeen-ali
- Advertisement -

நேற்றைய போட்டியில் பெங்களூரு அணி வீரரான மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். அதிலும் குறிப்பாக 16 ஆவது ஓவரை வீச குல்தீப் யாதவ் வந்தார். அப்போது அந்த ஓவரின் 5 பந்துகளை தொடர்ந்து பவுண்டரிக்கு அனுப்பினார். இதில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளும் அடங்கும். கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி. தொடரின் 35 ஆவது போட்டி நேற்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியில் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது கொல்கத்தா அணி. அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 58 பந்துகளில் 100 ரன்களும், மொயின் அலி 28 பந்தில் 66 ரன்களையும் குவித்தனர்.

பிறகு 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்களை மட்டுமே அடித்தது. இதன்மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. ரசல் 25 பந்துகளில் 65 ரன்களும், ராணா 46 பந்துகளில் 85 ரன்களையும் குவித்தனர். பெங்களூரு அணி வெற்றியை ருசித்தது கேப்டன் கோலி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisement