மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மட்டும் லீவ் எடுத்துக்கொண்ட மொயின் அலி – காரணம் இதுதான்

Moeen
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் எளிதாக வெற்றிபெற வேண்டிய வாய்ப்பை இந்திய அணி மழை காரணமாக தவறவிட்டது. அதன்பிறகு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.

indvseng

- Advertisement -

முதல் இரு ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்குகிறது. இந்நிலையில் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அனுபவ ஆல்ரவுண்டர் மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை பலமில்லை என்பதனால் ஆல்ரவுண்டர் மொயின் அலியை இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி உள்ளே கொண்டு வந்தது. ஆனால் தற்போது உடனே மீண்டும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவரை கழட்டி விட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து அவர்கள் கூறுகையில் :

Moeen

இங்கிலாந்து நாட்டில் தற்போது 100 பந்துகளை கொண்ட “தி ஹண்ட்ரட்” லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொயின் அலி தலைமையிலான பர்மிங்காம் பீனிக்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் காரணமாக அந்த இறுதி போட்டியில் கலந்து கொள்வதற்காக தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து மொயின் அலி விடுக்கப்பட்டு உள்ளார்.

moeen ali

பின்னர் மூன்றாவது போட்டி முடிந்ததும் நான்காவது போட்டியுயில் அணியில் இணைந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதி “தி ஹண்ட்ரட்” தொடரின் இறுதிப் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement