ரெண்டு பக்க வாழ்த்து கடிதம் அனுப்பிய மோடி, ஓகே தேங்க் யூ ன்னு பதில் சொன்ன தோனி – விவரம் இதோ

Modi
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி இரவு தனது ஓய்வு அறிவிப்பினை இன்ஸ்டாகிராம் மூலம் மிக எளிமையாக அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பை அடுத்து கிரிக்கெட் உலகம் பரபரப்பானது. அவரின் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியது மட்டுமின்றி அவரது நினைவுகளையும் பகிர ஆரம்பித்து அவருக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

7

- Advertisement -

தோனியின் ஓய்வு முடிவினை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என உலகெங்கிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துவர தற்போது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தோனிக்கு இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட வாழ்த்து கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

மோடி தோனிக்கு அனுப்பிய அந்த வாழ்த்துச் செய்தியில் : கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மக்களை உங்களது அபாரமான ஆட்டத்தில் கவர்ந்து வந்தவர் நீங்கள். உங்களது ட்ரேட் மார்க் ஸ்டைலில் ஓய்வு முடிவை அறிவித்து உள்ளீர்கள். இந்தியாவுக்காக பல வெற்றிகளை தேடித் தந்தவர் நீங்கள்.

modi 2 (1)

modi 2 (2)

உங்களது ஹேர் ஸ்டைல் ஆட்டம், அமைதியான நடைமுறை மற்றும் அதிரடியான ஆட்டம் என அனைத்துமே எல்லாருக்கும் பிடிக்கும். உங்களது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று இரண்டு பக்கத்திற்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் அனுப்பிய அந்த வாழ்த்து மடலை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தோனி.

ஒரு கலைஞன், ராணுவ வீரர் மற்றும் விளையாட்டு வீரர் என அனைவரும் விரும்புவது கடின உழைப்பிற்கும், அர்ப்பணிப்புக்கும் மக்களிடம் இருந்து கிடைக்கிற பாராட்டுக்கள் மட்டும் தான் என்று என்னை வாழ்த்தியதற்கும் பாராட்டுக்கும் உங்களுக்கு நன்றி என்று டோனி பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது/

Advertisement