சச்சினுக்கே சவால் விடும் கிரிக்கெட்டர்னா அது இவங்கதான். யார் இந்த லேடி தெரியுமா ?- விவரம் இதோ

Mithali
- Advertisement -

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மிதாலி ராஜ் நேற்று நடந்த போட்டியோடு சேர்த்து இதுவரை கிரிக்கெட் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவர்களுடைய 20 ஆவது ஆண்டை நிறைவு செய்து அதனை தாண்டியும் விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

Mithali 1

- Advertisement -

இவர் ஒருநாள் போட்டிகளில் 1999ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி அயர்லாந்து அணிக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் விளையாடினார். அதன்பிறகு தற்போது 20 ஆண்டுகள் 105 நாட்களில் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைத்துள்ளார். மேலும் வலதுகை ஆட்டக்காரராகிய இவர் மகளிர் கிரிக்கெட்டில் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 204 ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

மேலும் 36 வயதான மிதாலி ராஜ் 10 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 89 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அளவில் ஆண்கள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே 20 ஆண்டுகளை கடந்து விளையாடிய வீரர் என்ற சாதனையை வைத்துள்ளார். மொத்தம் இந்திய அணிக்காக 22 ஆண்டுகள் 91 நாட்கள் சச்சின் இந்திய அணிக்காக விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Mithali 2

அதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் அனுபவ வீரர் என்றால் தற்போது மிதாலிராஜ் 20 ஆண்டுகள் 105 நாட்கள் விளையாடியுள்ளார். எனவே சச்சினுக்கு அடுத்து இந்திய கிரிக்கெட் அனுபவ வீரர் என்றால் அது கங்குலி, டிராவிட், தோனி, யுவராஜ் போன்ற பெரிய வீரர்கள் கூட யாரும் கிடையாது. மிதாலி ராஜ் தான் பெரிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement