இந்திய அணியை மிரட்ட வரும் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் – கொஞ்சம் உஷாரா இருங்க

indvsaus
- Advertisement -

வரும் 17ம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றிருந்த போது இதுவரை வரலாற்றில் இல்லாத வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி விராட் கோலி தலைமையிலான அணி தொடரை கைப்பற்றியிருந்தது. இதன் காரணமாக இப்போது நடைபெறப்போகும் தொடர் அனைத்து தரப்பிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

INDvsAUS

- Advertisement -

இதையொட்டி இரு அணி வீரர்களும் மிகவும் பலம் வாய்ந்த அணியை தயார் செய்து வருகின்றனர். முதல் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டி என்பதால் முதல் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அடுத்தடுத்த போட்டிகளில் கை ஓங்கியிருக்கும் என்பது எழுதப்படாத விதி.
மேலும் முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கப்போகிறது. இதன் காரணமாக ஆஸ்திரேலிய அணி மிகப் பெரிய திட்டத்தை தீட்டி இருக்கிறது..

மிக வேகமாகவும் அதிகம் ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்து வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு முக்கியமான வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் மிட்செல் ஸ்டார்க். தனது குடும்ப உறுப்பினர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட முடியாமல் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

Starc

தற்போது குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் அனைத்து பணிகளும் முடிந்து விட்டதால் மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இணைய தயாராக இருப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்திருக்கிறார். உடனடியாக தற்போது சிட்னி மைதானத்தில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கப் போகிறார் மிட்செல் ஸ்டார்க்.

Starc

அப்படி இணையும் மிட்செல் ஸ்டார்க் இந்திய இளம் வீரர்களுக்கு தனது முழு வேகத்தில் பந்து வீசி பயிற்சி செய்து கொண்டு பின் பந்து வீசுவார். இது இந்திய இளம் வீரர்களுக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement