கொல்கத்தா அணியில் விளையாடியதை வெச்சு சொல்றேன்.. கம்பீர் இந்த 2 விஷயத்தில் அற்புதமான கோச்.. ஸ்டார்க் பேட்டி

Mitchell Starc
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பட்டு வருகிறார். 2007 டி20 மற்றும் 2011 உலகக்கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 2 கோப்பைகளை வென்றுள்ளார். அதே போல இந்த வருடம் ஆலோசகராக கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து 3வது கோப்பையை வெல்ல கௌதம் கம்பீர் முக்கிய பங்காற்றினார்.

அதன் காரணமாக தற்போது பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள அவருடைய தலைமையில் இலங்கை டி20 தொடரில் வென்ற இந்தியா ஒருநாள் தொடரில் தோற்றது. இருப்பினும் அடுத்து நடைபெற்ற வங்கதேச டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் இந்தியா அதிரடி வெற்றிகளைப் பெற்றது. அடுத்ததாக ஆஸ்திரேலிய மண்ணில் நவம்பர் மாதம் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.

- Advertisement -

ஸ்டார்க் பாராட்டு:

அந்த தொடர் கௌதம் கம்பீருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றே சொல்லலாம். இந்நிலையில் கௌதம் கம்பீர் எப்போதும் எதிரணிகளை வீழ்த்த வேண்டும் என்று சிந்திக்கக் கூடியவர் என ஆஸ்திரேலிய வீரர் மிட்சேல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். அத்துடன் சொந்த நலனுக்காக அல்லாமல் அணியின் நலனுக்காக இருக்க வேண்டும் என்பதில் கம்பீர அக்கறையுடன் இருப்பார் என்றும் ஸ்டார்க் பாராட்டியுள்ளார்.

இவற்றை 2024 ஐபிஎல் தொடரில் அவருடைய வழிகாட்டுதலில் கொல்கத்தா அணிக்காக கோப்பையை வென்றது போது அறிந்து கொண்டதாகவும் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கௌதம் கம்பீர் அற்புதமான பயிற்சியாளர் என்று பாராட்டும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “கொல்கத்தாவில் இருந்த என்னுடைய அனுபவங்களை வைத்து சொல்கிறேன்”

- Advertisement -

சிறந்த பயிற்சியாளர்:

“கம்பீர் இந்த விளையாட்டின் அற்புதமான சிந்தனையாளர். அவர் எப்போதும் எதிரணியையும் அவர்களை எப்படி வீழ்த்த வேண்டும் என்பதைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டிருப்பார். அது பேட்டிங் அல்லது பவுலிங் உட்பட அனைத்து கோணங்களாக இருக்கும். அது எப்போதும் தனி நபரின் வெற்றிக்காக அல்லாமல் அணியின் வெற்றிக்காக இருக்கும். அவருடன் கடந்த ஐபிஎல் தொடரில் செலவிட்ட 9 வாரங்கள் அற்புதமாக இருந்தது”

இதையும் படிங்க: இலங்கை மாதிரி கிடையாது.. அந்த 2 அனுபவங்களை வெச்சு இந்தியாவில் வெற்றி பெறுவோம்.. ரச்சின் நம்பிக்கை

“டி20 கிரிக்கெட்டில் அவர் சில நம்ப முடியாத நுண்ணறிவுகளை பெற்றுள்ளார். விளையாட்டின் மீதான ஆர்வம், களத்தில் இடம் பிடிப்பது முதல் எதிரணியின் பலவீனம் வரை ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்துவதில் அவரது விருப்பத்தை நீங்கள் பார்க்கலாம்” என்று கூறினார். முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் ஸ்டார்க்கை 24.75 கோடிக்கு கொல்கத்தா வாங்க கம்பீர் முக்கிய காரணமாக இருந்தார். மேலும் ஆரம்பத்தில் சுமாராக செயல்பட்ட போது அவருக்கு கம்பீர் ஆதரவும் கொடுத்தார். கடைசியில் அது கொல்கத்தாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisement