மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்ட வேளையில் அடுத்ததாக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்திய அணியின் தோற்க இதுவே காரணம் : மிட்சல் மார்ஷ்
அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று ஹோபர்ட் நகரில் நடைபெற்ற வேளையில் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 188 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் 20 ரன்கள் வரை குறைவாக அடித்ததாக நினைக்கிறேன். இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அதன் காரணமாகவே அவர்களுக்கு வெற்றி கிடைத்தது.
அதிலும் குறிப்பாக பந்துவீச்சின் போது அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தனர். கூடுதலாக பீல்டிங்கும் அவர்களுக்கு மிகச்சிறந்ததாக இருந்தது. எனவே இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் நிச்சயம் நல்ல போட்டியாக இருந்திருக்கும். டிம் டேவிட் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்.
இதையும் படிங்க : கடைசில இந்த மாற்றம் நிகழ்ந்து வெற்றி கிடைத்ததில் மகிழ்ச்சி.. வெற்றிக்கு பிறகு – சூரியகுமார் யாதவ் ஹேப்பி
ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் அனுபவ வீரராக ஸ்டாய்னிஸ், டிம் டேவிட்டுடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி இருந்தார். டி20 போட்டிகளின் போது சிறிய வித்தியாசத்தில் தான் மாற்றம் நடைபெறும். அந்த வகையில் இந்த போட்டியில் நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாக அடித்ததாலே தோல்வியை சந்தித்தோம் என மிட்சல் மார்ஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.



